நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 89

974 12 3
                                    

89

இந்தியா

மனோகர் தாய் வீடு விழா கோலம் பூண்டிருக்க, அத்தனை உறவுகளும் சந்தோஷத்தில் திளைத்திருந்தது.

''தாரு ..என்ன பண்ணிட்டு இருக்கீங்க ? டைம் ஆகுதும்மா ஆர்ஷனை கூட்டிட்டு வாம்மா ! கேக் கட் பண்ணணும்ல?'' மாடியை பார்த்து சுபத்திரா குரல் கொடுத்தாள்.

''இதோ வந்திட்டோம் அத்தை'' தாரிகா பட்டு புடவையை நீவியவாறு வர, கூடவே ஆர்ஷன் அவன் கையில் ஒரு வயது மகன் ஆரவ்  தன் பிஞ்சு அஞ்சு விரலையும் வாய்க்குள் வைப்பதும் தந்தை ஆர்ஷன் வாயில் வைப்பதும், அதற்கு ஆர்ஷன் முத்தம் கொடுப்பதுமாக விளையாடியவாறே வந்தனர்.
தாரிகா இருவரையும் ரசித்தவாறு வந்தாள்.

தோட்டத்தில் ஆர்ஷன்-தாரிகா தம்பதிகளின் புதல்வன் முதலாவது பிறந்த நாள் வைபவத்துக்கான ஏற்பாடு.

அபிநவ், மேகனா தம்பதிகளின் குழந்தை, குடும்பம் முழுதும் சூழ்ந்திருக்க,  எமிலியா எல்லா அலங்காரத்துக்கு பொறுப்பாக ஓடியாடி சரி பார்த்துக்கொண்டிருக்க, ஆரன் தனது வருங்கால காதல் மனைவி மீனாவுடன் இதர ஒழுங்குகள் செய்து கொண்டிருந்தான்.

மீனாவும் ஆர்ஷன் மீது அளவு கடந்த மரியாதை வைத்து இருந்தவள், ஆரனை ஏதோ ஒரு வகையில் பிடித்து போனது.

சண்முகவேலிடம் மாப்பிளை பார்க்க அவள் தந்தை சொன்ன போது, மீனாவின் குணம் அறிந்த சண்முகவேல் ஆரனை பற்றி சொல்ல, முதலில் மறுத்த மீனாவின் தந்தை, மகளின் மனசு மறுப்பு தெரிவிக்காது இருப்பதை பார்த்து அவளை புரிந்து கொண்டார்.

அதன் பின் சுபத்திரா, மனோகர் தம்பதிகள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவில்லை என்றானது. ஆர்ஷன்-தாரிகா தம்பதிகள் கேள்விப்பட்டு மிக சந்தோஷமடைந்தார்கள்.

ஆரன் முதலில் தனது கடந்தகாலத்தை நினைத்து  தயங்கினான். மீனா கூட பேசினான்.

''பிராட்டிகல் தம்பிக்கு அண்ணனாக இருந்து கொண்டு பின்னுக்கு நிக்காதீங்க! எனக்கு என்னமோ தெரியல உங்களை பிடிச்சு இருக்கு. அப்புறம் உங்க இஷ்டம்'' என்றுவிட்டாள்.

''ஒரு புரிந்துணர்வு வரும் வரை மேரேஜ் வேண்டாம்'' என்று அவன் அவளிடம் சொன்னான்.

''என்னை புரிந்து நான் உங்களுக்கு ஒத்து வருவேனா? என பாருங்க. அப்புறம் மேரேஜ் பத்தி முடிவுக்கு வரலாம் '' என்றுவிட்டான் .

இதோ பிறந்த நாள் வைபவம் முடிய அடுத்த முகூர்த்தத்தில் அவர்களது திருமணம் என முடிவானது.

இப்போ சொல்லுங்க சந்தோஷத்துக்கு குறை இருக்குமா அங்கே  ?

--முற்றும்--

நன்றிகள் வாசகர்களே🙏🏻. புத்தகம் எல்லா புத்தக காட்சியிலும் , லைப்ரரியிலும் , ஆன் லைனிலும் இருக்கிறது.
பொறுமையாக படித்ததுக்கு
எழுத்தாளர் சார்பில் மீண்டும் நன்றிகள் .

மீண்டும் ஒரு நாவலை சுரண்டி கொண்டு வரோம்.
டக் டக் என்று பதிவேற்றம் செய்ததுக்கு எங்களை பாராட்டவும் .
மற்றும்படி எந்த கருத்துக்களாக இருந்தாலும்
எழுத்தாளர் ஜியை ..ஜோவை முகநூலில் பிடித்து கொள்க !
Fb : http://www.facebook.com/jovin.thozikal
Or
writersjovithanovels@gmail.com
மீண்டும் சந்திப்போம்
நட்புடன்
சுவீட்டி அண்ட் ரம்யா டீம்🙏🏻

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாWhere stories live. Discover now