24
இத்தனையும் கேட்ட ஒரு பெண்ணுக்கு இப்படிப்பட்டவனை இழக்க கூடாது என்ற ஒரு துடிப்போ இல்லை எனில், கொஞ்சமாவது ஒரு ஈர்ப்போ அதுவும் இல்லை எனில், ஒரு வித நம்பிக்கை பிடிமானமோ அவன் பால் வந்திருக்க வேண்டும். மாறாக தாரிகாவுக்கு வியப்பாக இருந்தாலும், அவள் இருக்கும் மன நிலைக்கும், அது எல்லாம் வராமலே போனது தான் ஆர்ஷனின் துரதிர்ஷடம். அவன்பால் ஈர்ப்பு வருவதற்கு பதிலாக அவளது வேதாள மனது,
'ஓஹோ... வேலைக்கு போற டைமில்... டிரைவிங் போற டைமில வெள்ளைக்காரிகளுக்கு டேட்டிங் கொடுத்து வரவழைக்க அப்போதான் வசதியாக இருக்குமோ?' என வியாக்கியானம் பேசியும் கொண்டது.
''உங்க பிளானிங்... தட் மீன் பேமிலி பிளானிங்...என்ன?'' என்றான் அவளை பார்த்தவாறே அவனது குரல் கேட்டதும் சுதாரித்தவளாக,
''தாங்க்ஸ்! நான்... நான்... எப்படி பேசுறதுன்னு தயங்கிட்டு இருந்தேன்''
''என்கிட்டே ப்ரீயா பேசுங்க... எதுவும் பேசலாம். எப்பொழுதும் ப்ரீ...flexible பர்சன்....பார்ட்னர் ஆக போறவங்ககிட்டே... பிரண்டு போல பிரீயாக இருங்க''... என்றான். அவள் சம்மதம் தாராமலேயே பார்ட்னர் என்றதும் அவள் எண்ண ஓட்டத்தில்,
'பிளான் சி ஈஸியாகவே நடந்தேறிடும் போல இருக்கே' என்று சொல்லிக்கொண்டது.
''வேற ஏதாச்சும் கண்டிஷன்ஸ் ? ''அவன் மீண்டும் விசயத்துக்கு வந்தான்.
''அது வந்து... வந்து'' என கொஞ்சம் தடுமாறியவள்.
''கமான் டெல் மீ ! ஆஸ்க் மீ'' என தூண்டினான்.
பேசுவது என்று முடிவான பின் தயங்கி இருந்து தலை குனிந்து அடிமையாக இருப்பதை விட, வாய் திறந்து தன கருத்துக்களை சொல்லி விடலாம் என தீர்மானித்தாள்.''நீங்க சொன்னது போல நான் அங்கு வந்து செட்டிலாக கால அவகாசம் எடுக்கும்... ஐ மீன் டைம் எடுக்கும். அதனால் நான் ஒரு நிலைக்கு வரும் வரைக்கும்... நாம... நான்.. வாழ்...'' என அதுவரை தைரியமாக தொடங்கியவள் நாக்கு குழற தொடங்க 'முண்டம் சரியாக பேச தொடங்கிட்டு ...அப்புறம் இப்படி இழுத்துகிட்டு நின்னா ?' அவள் தன்னைத்தானே திட்டியவாறு இருக்க,
''எஸ் யு ஆர் கரெக்டு ! டைம் வேணும் ! எனக்கு நோ அப்ஜெக்சன் ''அவன் தோள்களை குலுக்கினான்.
''நான்.. நான்... என்ன சொல்ல வரேன்னா... எனக்கு எல்லாம் புரிந்து கொண்டு பழகி நா..நான் மைண்டால் மாறி... ஒரு மனநிலைக்கு வந்து... அது... அதுக்கப்புறம் இந்த பார்ட்னர்... ஸ்டேஜை பத்தி நினைச்சு பார்க்கலாம்'' என்றாள். ஒருவாறு அப்படி, இப்படி என்று வார்த்தைகளை கோர்த்து அவனுக்கு புரியும் விதமாக சொல்லிவிட்டு படபடப்புடன் பார்த்தாள்.
'உங்க பொண்ணு என்னவெல்லாம் பேசுறா தெரியுமான்னு ? எல்லோர் முன்னிலையிலும் இவன் பேசிட கூடாதே' என்ற படபடப்பு அவளுக்கு. அவளது பதட்டத்தை ரசித்தவனாக விழிகள் சிரித்தாலும் உதடுகள் வளைந்து,
''இதுல என்ன issue இருக்கு ? யு ஆர் ஆல்வேய்ஸ் கரெக்ட் i agree with you'' என்றான்.
''என்னடா இவன் எதுக்கெடுத்தாலும் சம்மதிக்கிறேன்னுறானே... சைடிஸ் டிஷ் நானாக சாய்ஸ் இருப்பவனுக்கு.. சல்லாபிக்க வேற தோலுங்க இருக்காங்க என்ற திமிறில் தான் சொல்றானோ ?'' மறுபடியும் அவள் மனது முருங்கை மரத்தில் ஏறி இந்த மரத்தில் மாங்காய் தான் காய்க்குது முருங்கை அல்ல என வாதிட்டது.
அவன் எது சொன்னாலும் அவளால் இலகுவாக ஏற்று கொள்ள முடியவில்லை. அவனது அணுகு முறைகள், பிராட்டிக்கல் மைண்ட் எல்லாம் அவளுக்கு சந்தேக கோடுகளை ஒவ்வொன்றாக போட்டுக்கொண்டே வந்தது அறியாமல்.
''பர்ஸ்ட் மேரேஜ்... தென் லவ் பண்ணுவோம்... நெஸ்ட் ஸ்மூத்தா மெலோடி போல லைஃப் ஸ்டார்ட் பண்ணுவோம்... இந்த செக்கண்டில் இருந்து நீங்க என்னோட பெஸ்ட் பிரண்ட்... நான் உங்க பெஸ்ட் well-wisher கான்டராக்ட் ஓகேயா ?'' என அவன் நாடியில் கை வைத்து, தலை சாய்த்து, அவளது தயக்கத்தை தகர்த்து எறியும் கடைசி வார்த்தையில் உறுதி கொடுத்தான். அவள் விழிகள் உயர்த்தி பார்த்தாள்.
ஒரு நொடி தான் பின்,
'ம்ஹூம் இவன் என்ன தான் சொல்ல வந்தாலும் எனக்கு ஒரு ஈர்ப்பும் இவன் மேல் வரமாட்டேங்குதே ! என்ன கொடுமையடா? என்ன செய்ய போகிறேன் ? கடனே என கழுத்தை நீட்டி...கண்ணை மூடிக்கொண்டு உணர்ச்சியின்றி உறவு கொண்டு, கரு தாங்கி, மன உளைச்சலில் அதை பெத்து, காலம் பூராவும் ஒட்டாத வாழ்க்கை வாழவேண்டுமா ? இல்லை என்று எதிர்த்தால் ? ஒரு நிமிடத்தில் சுதந்திரம் கிடைத்து விடும்....ஆனால் ...ஆனால் இந்த பெரியவர்கள் கட்டியவனே கதி... கணவனே கண்கண்ட தெய்வம்... குடும்ப மானமே குல விளக்கு...குப்பையை கொட்டித்தான் ஆகணும் என்று விடுவார்களோ ? ' தனக்குள் கேள்விகள் கேட்டு ஒரு முடிவுக்கு வர முயற்சித்தாள்.
(....)

أنت تقرأ
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதா
عاطفيةஅருணோதயம் வெளியீடு ஏப்ரல் 2022 வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே தவறானவர்கள் என்ற அபிப்ராயத்தால், ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மிகத் தெளிவாக சொல்லி இருக்கும் நாவல். வெளி நாடுகளில் வாழும் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்ற இந்தியா போன்ற கலா...