நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 46

356 11 0
                                    

46

அமைதியாகவே வீடு வந்து சேர்ந்தாள். சோர்வாக புத்தகங்களை சோபாவில் வீசினாள். ஹேண்ட்பேக் வேறு சோபாவில் வீசி எறியப்பட்டது.  பின்னால் வந்தவன் அவள் அப்படி செய்து பார்த்திராதவன் அவள் எறிந்ததை எடுத்து அடுக்கி அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு,

''ரிகா என்னாச்சு?'' என அவள் முன் வந்து நின்று கேட்டான். அவள் நெற்றியை தடவியவாறு அவனை நேராக பார்த்து,

''உங்ககிட்டே நான் பேசணும்'' என்றாள்.

''யா பேசலாம்! நினைவு இருக்கு.. இப்போ பேசுங்க கமான்'' என்றான் தோள்களை குலுக்கியவாறு.,

''யாரைக்கேட்டு என் குடும்பத்துக்கு உதவ செய்தீங்க?'' என்றாள் எடுத்த எடுப்பிலயே. அவன் புருவம் சுருங்க பார்த்தவன்,

''விஷயம் தெரிய வந்துடுத்தா? யார் சொல்லியிருப்பாங்க?''  மனதுக்குள் கேட்டவாறு புன்னகையுடன்,

''ஹேய் பேபி அது என்ன பிரிச்சு பேசிகிட்டு? நம்ம குடும்பம் என்று சொல்லுங்க'' என்றான்.

''இத பாருங்க!  என் குடும்பத்துக்கு நீங்க கொட்டி அழுதா எனக்கு ஒன்னும் உங்க மேல எந்த மண்ணும் வந்துடாது'' என்றாள் . அவளது வார்த்தை பிரயோகங்கள் புரியாமல் அவன் விழிக்க இவள் கோபம் மேலும் கூடியது.

''புரியலையா...என் குடும்பத்துக்கு நீங்க எந்த ஹெல்ப் செய்தாலும் அதனால் எனக்கு லவ்வும்  கிவ்வும், எந்த பீலிங்ஸ்யும் உங்க மேல வந்துடாது என்று சொல்றேன். அண்டர்ஸ்டான்ட்!!'' என கோபக்குரலில் கேட்டாள். அவனுக்கு இப்பொழுது புரிந்து போக சிரிப்புடன்,

''யா அண்டர்ஸ்டான்ட்!  பட்  அதை நான் எதிர்பார்த்து செய்யவில்லை. ரிகா  அதை விட'' அவன் தொடர அவள் கை  தூக்கி தடுத்தவளாக,

''போதும் ! நான் ஒரு முடிவோடு இருக்கேன். உங்க பணத்தை காட்டி எல்லாம் வாங்குவீங்க! அது உங்க பலமா இருக்கட்டும். ஆனா அந்த பணத்தை கொண்டு என்னை வளைக்க முடியாது'' என்றாள் கோபம் குறையாத  குரலிலேயே.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாWo Geschichten leben. Entdecke jetzt