நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 73

419 12 0
                                    

73

தாரிகா வேலை முடிந்தும் வீட்டுக்கு போகாது, அருகே அவள் போகும் கோயிலுக்கு வந்திருந்தாள். படிக்கட்டுகளில் அமர்ந்திருந்து யோசித்தாள்.

அவளுக்கு லண்டனில் இருந்ததை விட, இங்கு திரும்பி வந்த நாளிலிருந்து மிகவும் மன அழுத்தம் கூடிக்கொண்டு போவதை உணர்ந்தாள். எதிலும் அமைதி காண முடியவில்லை. எதிலும் நிம்மதி இல்லை. முழுமூச்சாக படிக்க முனைந்தாலும், மனதும் மூளையின் இறுகி போனது போல மைண்ட் பிளாக் என்று சொல்வார்களே ? அப்படி உணர்ந்தாள். அவளால் ஏன் ? எதனால் ? என்று விடை காண முடியவில்லை. மெலிந்து போக ஆரம்பித்தாள்.

வீட்டில் உள்ளவர்கள் கவலை கொள்ள இரவில் வாய் விட்டு புலம்பலுடன், உடல் சில சமயம் தூக்கி போட, சாவித்திரி தட்டி எழுப்பி நீரை பருக வைத்து தூங்க வைக்கும் நிலையானது. ஒரு கட்டத்தில் முடியாது போக, சாவித்திரி கணவரிடம் சொல்லி கவலைப்படத் தொடங்கினாள்.

''என்னவோ அடி மனதில் அவ வைச்சு இருக்காங்க. எங்ககிட்டே மறைக்குறளா? இல்லை அவளையே ஏமாத்திகிட்டு இருக்காளா? தெரியல ! அவ சுத்தமா நம்ம தாரிகா இல்லைங்க. எனக்கு பயமா இருக்கு'' என அழுதாள். அருணும் வத்ஸலாவும் கேட்டுக்கொண்டிருந்தவர்கள்,

''தாரிகாவை மன நல மருத்துவர்கிட்டே காட்டலாம். அவர் மூலம் அவளது மனதின் ஆழம் அறியலாம். தீர்வும் கிடைக்கும்'' என்கிறார்கள். சண்முகவேல் மகள் உடல் நிலை எதனால் மோஷமாகிறது ? என கண்டுபிடிக்க முதலில் தயங்கினாலும் பின் ஒத்துக்கொண்டார்.

அதன் பின் அருண் தனக்கு தெரிந்த சிறந்த மன நல மருத்துவரை அணுகினான். தாரிகாவை அழைத்த போது, அவள் மறுப்பேதும் சொல்லாது வரவே, அவர்கள் அவளும் அது தான் தீர்வு என்று முடிவு எடுத்து இருக்கிறாளா ? என எண்ணி ஆச்சரியம், சந்தோஷமடைந்தார்கள்.

மருத்துவர் தாரிகாவை சில கேள்விகள் கேட்டுவிட்டு மற்றவர்களை வெளியே இருக்க சொன்னார்.
அருணும், வத்ஸலாவும் தாரிகாவை பார்த்து,

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாDove le storie prendono vita. Scoprilo ora