நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 14

403 11 0
                                    

14

மனோகரின் தங்கை சுலோச்சனா வீடு  கலகப்பாக இருந்தது. மனோகரையும் , சுபத்திராவையும் குடும்பமாக பார்த்த  சந்தோஷத்தில் முகம் முழுதும் சிரிப்பாக இருந்தது  சுலோச்சனா குடும்பம்.

சிறியவர்கள் அபிநவ்வும், ஆர்ஷனும் வெளியே சென்றுவிட்டிருக்க, பெரியவர்கள் ஹாலில் வட்ட மாநாடு நடத்திக்கொண்டிருந்தனர்.

''மச்சான் இவ்வளவு சீக்கிரத்தில் நம்ம வீட்டில் ஒரு சந்தோஷ வைபவம் வரும்ன்னு நான் நினைக்கல..'' பக்கோடாவை வாயில் போட்டவாறு சுலோச்சனாவின் கணவன் கணேஷன் சொல்ல,

''எனக்கும் தான் மாப்பிள, ஆர்ஷன் சம்மதம் சொன்னதுமே அடுத்த பிளைட்டுல ஏறிட்டோம்..நல்ல பொண்ணு அமைஞ்சுட்டா யோசிக்காமல் உடனே கல்யாணத்தை வைச்சுக்கலாம்'' மனோகர் .

''அது எல்லாம் நல்லபடியாகவே அமையும். அமைஞ்சுடுத்துன்னு கூட சொல்லலாம்..ரெண்டு பொண்ணுங்க ஜாதகம் போட்டோ எல்லாம் இருக்கு எங்களுக்கு புடிச்சுப்போச்சு. உங்களுக்கும் புடிச்சு போனா பொண்ணு பார்க்க போயிடலாம்'' தாய் சாந்தா சொன்னார்.

''அத்தை ஜாதகம் பொருத்தம் பார்த்திட்டீங்களா ? ஆர்ஷன் ஜாதகம் லண்டன் நேரப்படி கணிச்சது. இங்கு எப்படி பார்க்குறாங்க? ஏதும் குளறுபடி இல்லையே?'' சுபத்திரா யோசனையுடன் வினாவினாள்.

அவள் கேட்பதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது. வெளிநாடுகளில் பிறக்கும் பிள்ளைகளுக்கு சிலர் இரு ஜாதகங்கள் எழுதிவிடுதுண்டு. பிறக்கும் நேரம் அந்த நாட்டின் சூரியன் உதய-அஸ்தமன நேரத்துக்கு ஏற்ப ஒரு ஜாதகம்.  இந்திய இலங்கை சூரியன் உதய-அஸ்தமன நேரத்துக்கு ஏற்ப ஒரு ஜாதகம் என எழுவதுண்டு. கூடுமானவர்கள் ஒரே ஒரு ஜாதகம் அதுவும் எந்த நாட்டில் பிள்ளை பிறக்குதோ அந்த நாட்டின் நேரத்திற்கு ஏற்ப எழுதிவிடுவார்கள்.
ஆனால் திருமணம் என்று வரும் பொழுது வெளிநாடுகளில் பிறந்த பிள்ளையின் ஜாதகத்தை இந்திய, இலங்கை முறைப்படி மாற்றி அமைத்து ஜாதகம் பொருத்தம் பார்ப்பார்கள். சில சிக்கல்களை எதிர்கொள்வதுண்டு. இப்படிப்பட்ட குளறுபடிகள் சில மணவாழ்க்கைகளை சிதைத்தும் இருக்கிறது.  எத்தனையோ வாழ்க்கை எல்லாம் கோர்ட்டு, சச்சரவு, பிரச்சனைகள் என்று போனதுண்டு.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாWo Geschichten leben. Entdecke jetzt