நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 52

373 14 0
                                    

52

ஆபீஸ் வந்து அமர்ந்தவனுக்கு வேலையில் மனம் செல்லாது மொபைலில் இருந்த மனைவியின் படத்தை பார்த்தான்.

'ரிகா லவ் யூ டான்னு சொல்லமாட்டியா? டைவோர்ஸ் எல்லாம் சும்மா உன்னை சீண்டி பார்க்கவே கேட்டேன்னு சொல்லேன். நீதான் வேணும்ன்னு சொல்லேன். உன் உதட்டில் இருந்து வரும் இந்த வார்த்தைகள் எனக்கு வரம் தெரியுமா ? உன் உன் காதல் எப்படி இருக்கும் என்று தெரியாது. உன் தொடுகை எப்படி இருக்கும் ? உன் பெண்மை எவ்வாறு இருக்கும்?  ம்ஹூம்.. எதுவும் நான் அறியாமலேயே என் காதலும் உணர்வுகளும் கருகி போனதே!  ஆம்பிளையா என்று கேட்டாயே ஆம்பிளை எப்படி இருக்கனும்ன்னு சொல்லாமல் விட்டுட்டியே'

'எப்படி இருக்கனும்ன்னு ஒரு லிஸ்ட் போடு! அதில் ஒன்று கூட பிசகாது இருப்பேன்.  அதை கூட புரிந்து கொள்ளாமல் ஏன் அவசரப்பட்டாய் ? .  என்னால் உன்னை வெறுக்கவும் முடியவில்லை. மறக்கவும் முடியவில்லை. நீ என் வாழ்க்கையில் வந்த வேகத்திலே விலகி போவாய் என்று தெரிந்திருந்தால்  உன்னை எனக்குள் ஆழமாக இறக்கி இருக்கமாட்டேன். உன்னை எனக்குள் பதுக்கி வைத்திருக்க மாட்டேன். உன்னை பார்த்த நொடியில் இருந்து நீ எனக்கானவள் என்று என் மைண்டில் ஸ்ட்ராங்கா ரெஜிஸ்டர் ஆகி போச்சு! உன் உருவம் எனக்குள் அச்சு பிசகாது ஓவியமாக உருமாறி இருக்கு . எப்படி உதறுவேன் ? எப்படி அழிப்பேன்?'

'நீ யாரையாவது லவ்  பண்ணனும்.. இல்லைன்னா அவ்வளவு ஸ்ட்ராங்கா என்னை பார்த்து எந்த ஜென்மத்துக்கும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லி இருக்க மாட்டே. எனக்கு என் காதலை சொல்ல தெரியல ரிகா! ஆனா காட்ட முடியும்! உன்னை எனக்குள் வைச்சு பூஜிக்க முடியும்! அதுக்கு ஒரு சான்சு தாராமலேயே டைவோர்ஸ் வரை வந்துட்டே. ஒரு மாசத்துல எப்படி நீ என்னை புரிஞ்சுகொண்டிருக்க முடியும்?'

'இன்னும் கொஞ்ச காலம் இரேன்! என் காதலை உன் காலடியில் காண்பாய்! உன் காதலை நீ உணர்வாய்! நீதாண்டா வேணும் என்று சொல்வாய்! நீ டைவோர்ஸ் ஒரு ஆறு மாதம் கழித்தோ, ஒரு வருடம் கழித்தோ கேட்டிருக்க முடியுமா?  என்னை வேண்டாம் என்று தான் சொல்லியிருப்பியா?  எப்படி சட்டென்று இப்படி ஒரு முடிவுக்கு வர துணிந்தாய்? எது வந்து உன்னை இந்தளவுக்கு தூண்டியது? எந்த விதத்தில் நான் உனக்கு பொருந்தாது போனேன்?' வாய்விட்டே பேசிக்கொண்டே போனவன் எதிரே எமிலியா வந்து நின்றது கூட தெரியாது. அவள் அவனது தோளை தொட்டு,

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாWhere stories live. Discover now