நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 71

396 9 0
                                    

இந்தியா

சண்முகவேலுக்கு மகள் போன வேகத்திலே திரும்பி வந்தது உறுத்திக்கொண்டே இருந்தது.

உண்மையில் என்ன நடந்தது என அவளாக தெளிவு படுத்துவாள், மேலும் எதுவும் சொல்வாள் என மகளது வாழ்க்கையை சீரமைத்து விட முடியாதா ? என தத்தளித்துக்கொண்டு காத்திருந்தார். ஆனால் அவள் தன் மேல் தான் தவறு என்று சொன்னதோடு மேற்கொண்டு சொல்லாது ஒதுங்கி போய் விட்டாள்.

''மாப்பிளை ஆர்ஷனுக்கு போன் போடுவது அழகா?'' என பலமுறை யோசித்தார்.

மனது அமைதி இழந்து, ஒரு வித ஏமாற்ற உணர்வு வர, மனது பதட்டமாக இருந்தது. அவரால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. சாப்பிட முடியவில்லை. வற்புறுத்தி கல்யாணம் செய்து வைத்தாலும் மாப்பிள்ளையின் குணத்தையும், அவரையும் புரிந்து காலபோக்கில் மகள் சேர்ந்து வாழ தொடங்கிவிடுவாள் என எதிர்பார்த்தார். ஆனால் அவள் இப்படி வந்து நிற்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.

ஆர்ஷன் ஒரு வார்த்தை மகளை பற்றி குறை சொல்லவோ இல்லை. அதை விட அவன் குடும்பத்தினை சேர்ந்த எவரும் வீட்டு வாசல் படி தேடி வந்து சண்டை போடவில்லை. அவர்களது பெருந்தன்மையை நினைத்து இவருக்கு குற்ற உணர்வு தாக்கியது. கூனிக்குறுகி போனார் எனலாம்.

தான் தேர்ந்தெடுத்த வழியும், கல்யாணம் செய்து வைத்த முறையும் தப்பாக மகளுக்கு தோன்றலாம். ஆனால் தன்னால் அலசி ஆராயப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பம் மனோகர் குடும்பம். அது எவ்வாறு தப்பாகும்? அவர்களுக்கு பிறந்த ஆர்ஷன் எவ்வாறு சரியில்லாதவன் ஆவான் ? அவருக்கு மனது கேட்கவில்லை. தான் தொடக்கி வைத்த வாழ்க்கை தானே ? ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று யோசித்து தீர்வு காணும் நோக்கோடு இரவு , பகலாக கோயிலே கதி என விழுந்து கிடந்தார்.

கணவர் வீட்டை மறந்து சந்நியாசி போல் கோயிலில் படுத்து இருப்பதை எண்ணி சாவித்திரி கலங்கி போனாள்.

''வாழா வெட்டியாக வந்து நிற்கும் மகளை நினைத்து அழுவதா...? கம்பீரமாக கர்ஜித்துக்கொண்டு நிற்கும் கணவர் இடிந்து, பேச்சு இன்றி, ஒடுங்கி, இருப்பதை பார்த்து கலங்குவதா ?'' என தவித்தாள்.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாМесто, где живут истории. Откройте их для себя