நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 39

288 11 0
                                    

39

தாரிகா இரவு முழுதும் தூங்காது ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

ஆர்ஷன் முதல் வேலையாக டிரைவிங் ஸ்கூலில் இணைத்துவிட ஆயத்தமாக வந்தவன் அதை அவளிடம் சொன்னான்.

''எனக்கு எதுக்கு டிரைவிங் லைசன்சு?'' என்றாள் அமைதியான குரலில்.

''என்னங்க இங்கு டிரைவிங் எவ்ளோ இம்பார்ட்டண்ட் தெரியுமா ? டிரைவிங் கத்துக்கிட்டு, வண்டியும் இருந்தா உங்கள் வேலை பாதியாக குறைஞ்சுடும் . தென் எவ்ளோ டைம் எக்கனாமி பண்ண முடியும் எதையும் ஸ்டடி செய்துக்கலாம் தப்பில்லையே'' என கேட்டான்.

''பச் ! எனக்கு இன்ரஸ்டிங் இல்லை'' என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு. ஆர்ஷன் மனைவியை கனிவாக பார்த்தான். அவளருகே எட்டு வைத்து வர, அவள் பார்வையை இவன் பக்கம் திருப்பியவளாக பின்னுக்கு எட்டு வைத்தாள். அதை கவனித்தவன்,

''ரிகா ! ப்ளீஸ் ! நார்மலாக இருங்க ! வாட் பிராப்ளம் ?'' என்றான் கனிவுடன் பார்த்து.

''நீதாண்டா பிராப்ளம் ! இந்த வாழ்க்கை தான் பிராப்ளம் !'' என முணுமுணுத்தாள்.

அவள் உதட்டசைவை வைத்து தமிழை புரிந்து கொள்ளும் அளவுக்கு தமிழை கரைத்து குடித்தவன் இல்லையே. புரியாமல் புன்னகையுடன்,

''லைன்சு இருந்தா நீங்க இந்தியாவில கூட வண்டி ஓட்டலாம். இன்டர்நேஷனல் லைன்சு வாங்கிடலாம். தென் நானே தனியாக வண்டி டிரைவிங் பண்ணிட்டு போவேன் வருவேன் என்று உங்களுக்கு ஒரு self confidence வரும்.''

''......''

''நெக்ஸ்ட் நான் ஆபீசில் பிஸியான நீங்க தனியாவே உங்க வேலைகைள பார்த்துக்கலாம். நம்ம kids ஐ என் ஹெல்ப் இல்லாம ஸ்கூல், பார்க், என்று எங்கு வேணா கூடி போகலாம்.'' என்றான் கண்களில் மெல்லிய குறும்பு மின்ன.

அவளுக்கு சீன சுவர் போல உள்ளுக்குள் சினம் மூண்டு கொண்டே போனது.

''ஓவரா போறானே'' என நினைத்தவள்,

''ஒத்துக்கலைன்னா விடமாட்டீங்களா ? எதையும் கம்பல் பண்ண மாட்டேன்னு சொன்னீங்க. இப்போ தலை கீழாக இருக்கு'' என்றாள் லேசாக எரிச்சல் எட்டி பார்க்க, அந்த குரலில் தெரிந்த எரிச்சலை அவன் உணர்ந்து கொண்டான். அவள் உட்காருவதற்கு சேரை இழுத்து போட்டவனாக,

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாDonde viven las historias. Descúbrelo ahora