நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 47

377 12 0
                                    

47

தாரிகாவுக்கு அவனது அசராத தோரணை ஒரு வித பயத்தை கொடுத்தது. அதைவிட எவ்வளவு பேசியும் அவனது பொறுமையும், அமைதியும் மேலும் சினத்தை மூட்டியது. அவன் அவள் பக்கம் திரும்பியவன்,

''நீங்க கேட்ட டைவோர்ஸ் எனக்கு தந்துட்டு போவதில் ப்ராப்ளம் இல்லைங்க. பட் இது ரெண்டு பேமிலி சம்பந்தப்பட்டது. உங்க குடும்பம் எவ்வளவு கனவுகளோடு உங்களை எனக்கு மேரேஜ் பண்ணி கொடுத்திச்சோ?'' என்றவனை இடைவெட்டினாள்.

''அந்த குடும்பத்துக்காகத்தான் பல்லை கடிச்சுக்கிட்டு மணவறையில் உட்கார்ந்தேன். ஆனா ..ஆனா ..அது எவ்ளோ மடத்தனமுன்னு இப்போதுதான் புரியுது''

''ஆல் ரைட் மிஸ் தாரிகா ! இப்போ'' என தொடங்கியவனை அவள் குழப்பமாக ஏறிட்டாள். மேடம் என அழைத்தவன் வாயில் மிஸ் தாரிகா என வந்ததையிட்டு அவள் பார்க்க அவனோ,

''வாய்க்கு வந்ததை பேசுபவள். பேசும் பேச்சுக்கும் பார்க்கும் பார்வைக்கும் சம்பந்தமே இல்லாம நிக்குறாளே. கொஞ்சம் கூடவா லவ் வரல?'' தனக்குள் கேட்ட மனதை அடக்கிவிட்டு அவளது விழிகளின் குழப்பத்துக்கு விளக்கம் கொடுக்க முனைந்தான்.

''எனக்கு பிடிச்ச பேர கூப்பிட வேண்டாம்ன்னுட்டீங்க சோ மிஸ் தாரிகா என்று கூப்பிட்டேன். தென் டைவோர்ஸு வேற நடக்க போகுது. எனக்கு மேடம்.. மேடம்ன்னு கூப்பிட என்னமோ நீங்க வயசானவங்க போல பீலிங்ஸ் வருது... நீங்க மறுத்தாலும் அப்படித்தான் கூப்புடுவேன். அப்போதான் உங்களுக்கும், எனக்கும் ஒரு கொடுமையான அந்த மேரேஜ் சம்பவம் நடக்கவில்லை என்ற பீலிங் வரும்'' என்றான் தோள்களை உயர்த்தி. தாரிகா சினத்தில் இருந்தவள்,

''ரொம்ப முக்கியம் இவ்வளவு விளக்கமும் நான் கேட்டேனா? என்றாள். ஆர்ஷன் மூச்சை இழுத்து விட்டவனாக,

''ஒரே ஒரு விஷயம் சொல்லிடுறேன். உங்களுக்கு உங்க குடும்பம் முக்கியம்ன்னு சொன்னீங்க. அவர்களுக்காக எதுவேணா செய்வேன்ன்னு சொன்னீங்க. நமக்கு மேரேஜ் ஆனதும் உங்க குடும்பம், என் குடும்பம் எனும் நினைப்பு எனக்கு வந்துடுத்து. உங்க உறவுகள்.. எல்லோரும் அன்பானவங்க.. அவங்களுக்கு நான் செய்தால் என்ன? நீங்க செய்தால் என்ன? எல்லாம் ஒன்று தான் என்ற நினைவில் செய்தேன். செய்த உதவிகளை திரும்ப பெற முடியாது. நீங்க..'' என அவன் தொடர போக அவனை கோபமாக இடைவெட்டினாள்.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாWhere stories live. Discover now