நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 87

529 11 0
                                    

87

அடுத்த நாள் ஒரு படையே டூர் கிளம்பியது. இந்தியாவின் முக்கிய இடங்களை சுற்றி பார்த்தார்கள். சந்தோசம் என்றால் அப்படி ஒரு சந்தோஷத்தை எல்லோரும் அனுபவித்தார்கள். ஆர்ஷன் மனைவியை அவளது குடும்பத்துடன் கூடுமானவரை இருக்க வைத்தான்.

''மாப்பிளை கூட ஹனிமூன் கொண்டாடாது, அதை கெடுப்பது போல நம்ம கூட அவளை இருக்க சொல்கிறாரே'' மறுத்த சண்முகவேல் தம்பதிகளிடம்,

ஆர்ஷனோ ''என்கூட தானே காலம் பூரா இருக்க போறா? இங்கே நாம நிற்க போவது இன்னும் சில நாட்களே. அதுவரை அவள் உங்க கூடவே இருந்து என்ஜாய் பண்ணட்டும்' எனக்கு அப்ஜெக்சன் இல்லை'' என்றவன் மனைவியை பார்த்து,

''ரிகா உனக்கு ?'' என கேட்டான்.

''எனக்கு அப்ஜெக்சன் இருந்தாலும் வேற வழி இல்லாமல் புருஷன் சொல்லு கேட்கவேண்டி இருக்கிறது ..ஏன்னா தி கிரேட் ஆர்ஷன் பயலு எது செய்தாலும் கரெக்ட்டா இருக்குமாம்'' தாரிகா கணவனை காதலுடன் பார்த்தவாறு சொன்னாள்.

''தாங்க்யூ பேபி'' என்றான் அவன்.

சண்முகவேல் சாவித்திரியை பார்த்து தனது சட்டை காலரை தூக்கிவிட்டார்.

இனிதே அவர்களது சுற்றுலா முடிந்தது. எல்லோருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத சுற்றுலாவாக அமைந்தும் போனது.

சண்முகவேல் ஆர்ஷன் மேல் அளவு கடந்த அன்பை வைத்து இருந்தார் எனலாம். ஆரனை பார்த்த பின்னும் அவன் பிறந்த நாட்டின் கலாச்சாரத்தினால் பாதை மாறி போனாலும், அவன் குடும்பம் அவனை தாங்கும் விதம் பார்த்து,

''அவனுக்கு ஏற்ற வரனை நானே கொண்டு வருகிறேன். என் மாப்பிள்ளைக்கு நான் செய்யும் கை மாறு'' என சபதம் போட்டார்.

மனோகர் அவரது கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டார். ஆரனும் இந்தியாவில் சில காலம் தங்கி தொழில்களை பார்த்து கொள்வதாகவும், அபிநவ் கூட இருந்து பழக்க வழக்கங்களை மாற்றி கொள்வதாகவும் சொன்னான்.

அவனை இந்தியாவில் விட்டுவிட்டு இளையவனுடன் லண்டன் திரும்ப மனோகர், சுபத்திரா தம்பதிகள் யோசித்தார்கள். ஆர்ஷன் பெற்றவர்கள் தன் கூட இருப்பதா? தமயன் கூட இருப்பதா? என திண்டாடுவதை கண்டு கொண்டான்.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாTempat cerita menjadi hidup. Temukan sekarang