நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 32

323 9 0
                                    

32

எமிலியாவுடன் தொடர்பை முடித்த ஆர்ஷன் அங்கு நடந்தவைகளை காதில் வாங்கி இருந்தவன் வாய்க்குள் சிரித்தவாறு ஸ்டைலாக அவன் நடந்து வந்தான்.  மனைவியின் அருகே வந்து, குனிந்து இருந்த அவளது தலைக்கு கீழாக மேலும் இவன் தலை குனிந்து விழி உயர்த்தி புருவத்தால்,

''என்ன ?'' என்பது போல கேட்டான்.
அவனை அருகில், மிக அருகிலும் பார்த்தவள் அவனது உடல் வாசனை நாசிக்குள் நுழைய, முகம் சுருங்கி, உடல் சுருங்கி இறுக தொடங்கினாள். அதை கண் கூடாக பார்த்தவன் தனது உயரத்தை நிமிர்த்தி கொண்டவனாக,

''my princess ஹனிமூன் போலாமா ?'' என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டான்.

'ஹனிமூன் ? அதுக்குத்தான் முதல் இரவு அன்று விட்டு பிடித்தானா ? ஹனிமூன் வரும் தானே குதறிடலாம் என்று காத்திருந்தானா ? அய்யோ எப்படி அந்த உறவை ஏற்றுக்கொள்வேன் ? எனக்கு பிடிக்காமல்... என்னை தீண்டுவது கற்பழிப்புக்கு சமம் அல்லவா ?  இதை ஏன் இவன் உணர மாட்டேன்னு நிக்குறான் ?' அவளுக்கு தலை கிறுகிறுக்க மனது கேட்டது.

'அடி  மேதாவி ! நீ தாலி கட்டிய அவன் மனைவி. அதை மறந்துட்டு வள வளத்து கொண்டிருக்கே' சாடியது ஒரு மனது .

'ஓஹோ! தாலி ஒண்ணு  கட்டின உடனே என் பெண்மையை தாரை வார்த்து கொடுக்கணுமா? பிடிச்சுதா? பிடிக்கலையா? விருப்பம்... வெறுப்புகள் எதுவும் பெண்ணுக்கு இல்லையா ?' அவள் தனக்குள் கேட்டுக்கொள்ள,

'அது யாருக்கு வேணும் ? காலம் காலமாக நடந்துகிட்டு வருவது தானே? என் விருப்பத்தை பெத்த தந்தை கேட்டாரா?  கூட பிறந்தவன் கேட்டானா?  அவர்களே கேட்காத போது கட்டிக்கிட்டவன் மட்டும் கேட்டுடுவானா? பெண் எப்பொழுதும் அடுத்தவன் தேவைக்கே படைக்கப்பட்டு இருக்கிறாள். அவளுக்கென்று ஆசை விருப்பம், எதுவும் இருந்திட கூடாது. இருந்தாலும் அதை குழி தோண்டி புதைத்து விட்டு என் அம்மா போல புருஷனுக்காக வாழணும்.   பிள்ளைகளுக்காக வாழணும். இப்படி ஜெனரேஷன் பை ஜெனரேஷனா பெண்கள் அடுத்தவங்களுக்காகவே வாழ்ந்து சாக வேண்டியது தான். இப்போ நான்...இன்னொரு சாவித்திரி ஆகணுமா?  இதோ கழுத்தில் தொங்கி கொண்டு இருக்கும் தூக்கு கயிற்றுக்காக.. கட்டிலை பகிரவேண்டும். எத்தனையோ பேருடன்  கூத்தடிச்சவன் கூட கூச்சம் இன்றி இணைந்து, பிள்ளை பெத்து தரவேண்டும்' நினைத்து பார்த்தவளுக்கு அருவருப்புடன் கூடிய எரிச்சல் எட்டி பார்க்க தொடங்கியது,

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாOnde histórias criam vida. Descubra agora