நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 20

400 10 0
                                    

20

சண்முகவேல் வேகமாக இறங்கி விடு விடுவென கிணற்று பக்கம் போய், நீர் இறைக்கும் கயிறை கழட்டியவராக அருகே இருந்த மாமரத்தில் தூக்கு போடும் முடிச்சு போட, பைக்கை துடைத்த கொண்டிருந்த தருண்,

''அப்பா'' என கத்தியவாறு பாய்ந்து வந்தான். அவனது சத்தம் கேட்டு அருணும் பைக்கை போட்டு விட்டு பின் பக்கம் ஓட, சாவித்திரியும், வத்ஸலா வும் சமையல் கட்டில் போட்டதை போட்டபடியே ஓட, தாரிகா படித்துகொண்ருந்தவள்,

''என்ன எல்லோரும் ஓடுறாங்க... ?'' என தனக்குள் கேட்டவாறு வர,

அங்கே சண்முகவேல் தூக்கு கயிற்றில் தலையை நுழைத்து தூங்க போராடிக்கொண்டிருந்தார். தருணும், அருணும் அவரை இழுத்து பிடித்து தடுத்து கொண்டிருந்தார்கள். சாவித்திரி தலையில் அடித்து கொண்டிருந்தாள். வத்ஸலா செய்வதறியாது திகைத்து போய் நின்றிருந்தாள்.

''என்னப்பா ? ஏம்பா இந்த முடிவுக்கு வந்தே?'' தருண் அழுதவாறு கேட்டான். அருணுக்கு கைகள் நடுங்கி கொண்டிருந்தது.

''எல்லாம் இவளால் தான் ! இவ தான்'' என்றார் தாரிகாவை சுட்டி காட்டி. தாரிகாவும் திகைத்து, பயந்து போய் இருந்தவள் தந்தை தன்னை பார்த்து குற்றம் சாட்டி விரல் நீட்டவும் முகம் இருண்டது.

''பாவி என்னடி பண்ணி தொலைச்சே?'' கேட்டவாறு தருண் ஒங்கி அவளது கன்னத்தில் அறைந்தான். அவள் விக்கித்து போய் நிற்க,

''டேய் என்னடா இது ? வளர்ந்த பொண்ணை இப்படி கை நீட்டி அடிச்சுகிட்டு இருக்கே?'' அருண் கோபமாக கை ஓங்கினான். வத்ஸலா வுக்கும் கோபம் வந்தது.

''வளர்ந்த பொண்ணா ? இவ என்ன பண்ணி தொலைச்சு இருந்தா? அப்பா நம்ம எல்லாரையும் விட்டுப்போக துணிந்து இருப்பார் ?'' என்றான் அவன் சீறலுடன்.

''என்னங்க என்ன காரியம் செய்ய பார்த்தீங்க? இந்த குடும்பத்தை நினைச்சு பார்த்தீங்களா ?'' சாவித்திரி சேலை தலைப்பால் வாயை பொத்தி விம்மியவாறு கேட்டாள்.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாWhere stories live. Discover now