லாவண்யா சிவாவிடம் மன்னிப்புக் கேட்க வேனில் காத்திருந்தாள் . எப்போதும் முதலில் வருபவன் தாமதமாக வந்தான்.அதனால் பேச முடியாத நிலை ஏற்பட்டது.வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில் பேசிக்கலாம் என நினைத்தாள்.ஆனால் அவனோ விரைவாக சென்று விட்டான்.லாவண்யாவிற்கு குற்ற உணர்ச்சியாக இருந்த்தது. பள்ளியில் சிறந்த மாணவன் என்ற பெயர் எடுத்தவன்.அன்பு,பண்பு,மதிப்பு என குணசீலன். இரவு உணவு உண்டபின் அவன் வெளியே அமர்ந்து இருப்பதை கண்டு இவளும் சென்றாள்.மெதுவாக அவனிடம் sorry da நான் சும்மா விளையாட்டாக செய்தேன் என்ற கூறினாள். இவள் எவ்வளவோ முயன்றும் அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இவளோ பேசி கொண்டே சென்றாள்.அவன் எழுந்து உள்ளே சென்று விட்டான்.இவளுக்கு ஏனோ வருத்தமாக இருந்தது. அடுத்த சில நாட்களும் இவ்வாறு சென்றது.சிவாவின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.அவன் ஒரே மகிழ்ச்சி யே அவள் தான் என நினைத்து வந்தான்.ஆனால் அவளே ஏளனம் செய்த பின் மிகவும் வருந்தினான்.அவளிடம் பேச தோன்றினாலும் பேச மாட்டான்.அவள் தினமும் ஒரு,sorryசொல்லி விட்டு போவாள்.