உயிர்-21

3.3K 146 75
                                    

லாவண்யா குழப்பத்தில் இருந்தாள்.வருண் எதற்காக நைட் 8 மணிக்கு restaurant வர சொன்னான். காலேஜ் முடிந்த பின் பேசலாமே.

லாவண்யாவின் உள் மனது அவளை போகாதே என எச்சரித்தது.யாரையும் நம்ப முடியாது.சூழ்நிலை கைதி என அவர்கள் ஒரு வார்த்தையில் முடித்து விட்டாலும் பாதிப்பு நமக்கு தான்.

என்ன பண்ணலாம் என யோசிக்கும் போது சிவாவின் நியாபகம் வந்தது. அய் ஜாலி சிவா கூட போலாம் என அவனுக்கு போன் செய்தாள்.

இரண்டு ரிங் போன பின் எடுத்தவன் .urgent சீக்கிரம் சொல்லு என்றான்.

பிசியா இருக்கான் என்பதை புரிந்து கொண்டு இல்ல டா வருண பாக்க போறன் அதான் என்று லாவண்யா சொல்லி முடிப்பதற்குள் போன் கட்டாகி இருந்தது.

ஏதாவது ஆட்டோவில் போலாமா என யோசிக்கும் போது வருண் கால் செய்தான்.

லாவண்யா கண்டிப்பா வரல ரொம்ப முக்கியமான விஷயம் பேசனும் என்றான்.

ஆ ... வரன் என்று போனை கட் செய்தாள்.

அவசரமாக கிளம்பி வெளியே வந்து பார்த்தால் சிவா அங்கு பைக்கோடு நின்று கொண்டு இருந்தான்.

ஏன் வந்த ஏதோ பிஸி னு நினைச்சேன் என்றாள்.

ஆமா கொஞ்சம் பிஸி தான் ரவி எதுக்கு இருக்கான் என்றான் சிவா.

எங்க அண்ணன நல்லா யூஸ் பண்ணிகிற . நா உன்ன வர சொல்லவே இல்லயே நா வெளியே கிளம்பி போறேன் உனக்கு யார் சொன்னா.

உயிரின் உயிராய்Where stories live. Discover now