உயிர்-10

4.6K 173 44
                                    

சிவாவின் பள்ளி படிப்பு நன்றாக முடிந்தது.  அவன் பொறியல் படிப்பில் சேர அவன் பெற்ற மதிப்பெண் மிகவும் உதவியது.   அவன் விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்தான். அவனுக்கு இருந்த ஒரே மனகுறை லாவண்யாவை பார்க்க முடியாதது தான்.  அவள் எங்கே இருக்கிறாள் என்றே சிவாவிற்கு தெரியவில்லை
   
     கனியிடம் விசாரித்தால் அவளும் தெரியவில்லை என்று கூறினாள்.  அவளை பார்க்க வேண்டும் போல அவனுக்கு இருந்தது.

    லாவண்யா மிகவும் சோர்ந்து போய் படுத்து இருந்தாள்.  அவளுக்கு இரண்டு முறை typhoid வந்ததால் வாடி போய் இருந்தாள். அவள் முதலில் அத்தை வீட்டில் இருந்தாள்.  பின் அவள் தாத்தா வீட்டில் இருந்தாள். அங்கு இருக்கும் போது தான் typhoid வந்தது. 
உடனே அவளை கவனிக்க இயலாது என தாத்தா கூற அவள் சித்தி வீட்டிற்கு அனுப்பபட்டாள்.

    முதல் ஒருவாரம் நன்றாக இருக்கும் போக போக அவர்கள் கவனிப்பு வேறு மாதிரி இருப்பதாக உணர்ந்தாள்.ஏக்கம்,அழுகை,ஏமாற்றம் என வாழ்க்கை அவளுடன் hide and seek விளையாடுவது போல உணர்ந்தாள். எப்போதும் தீபாவளிக்கு 3 dress வாங்கி எதை போடலாம் என குழம்புபவள் இந்த முறை யார் dress வாங்கி தருவாங்க என குழம்பி கொண்டு இருந்தாள்.

   Typhoid வந்தால் உடல் வலி வேற அதிகமாக இருக்கும். வலியில் கதறி அழ தோன்றினாலும் அழ மாட்டாள்.அவள் எதற்கும் அழ கூடாது என பழகி கொண்டாள்.

    தீபாவளிக்கு இரண்டு நாள் முன் dress எடுப்பது பற்றி சித்தியும் சித்தப்பாவும் பேசுவது கேட்டது.சித்தி சித்தப்பாவிடம் கூறினார் "இவ வேற இங்க இருக்கா அப்ப நாம தான் சேர்த்து dress எடுக்கனும். ஒரு 500 ரூபாய் வரை னா பரவால "

அதற்கு சித்தப்பா என்ன பரவால நாம ஏன் செய்யணும் அவங்க அப்பா வீட்டு side ல யாராவது செய்யட்டும் நமக்கு என்ன தலை எழுத்து என்றார்.

 

              இதை கேட்ட லாவண்யாவிற்கு யாரோ தொண்டைக்குள் குத்துவது போல் இருந்தது. போன தீபாவளியின் போது அவள் அம்மா அப்பாவிடம் "பாப்பாவுக்கு பட்டு பாவாடை வாங்கலாம் னு நினைக்கிறேன் " என்றார்.அதற்கு அவள் அப்பா "நா அவளுக்கு jeans வாங்கி தரலாம்னு இருந்தேன்" என்றார்.
    
      இறுதியாக 3dress வாங்கிட்டு வீட்டுக்கு வந்தாள்.ஊருக்கு போகும் போது அவள் அம்மா தன் தங்கைகும் (அதான் அந்த சித்தி) அவள் வைத்து இருப்பதை போலவே dress வாங்கி கொண்டு போவாள். அப்போது இவளிடம் காட்டிய பாசமும் இப்போது காட்டும் பாசமும் வேறு மாதிரி இருந்தது.

          தலை வெடித்து விடும் போல் இருந்தது. பையில் இருந்து அந்த பர்ஸை எடுத்தாள்.  அதில் அவர்கள் குடும்ப புகைப்படம் இருப்பதை பார்த்தாள். அதில் இரண்டு கேரம் போர்ட் காயின் இருந்தது. அது சிவாவிடம் இருந்து அவனுக்கு தெரியாமல் எடுத்தது.  கொஞ்ச நேரம் அப்படியே கற்பனை உலகில் இருந்தவள், திடீரென எழுந்து அவள் சித்தியிடம் சென்றாள்.

     சித்தி இவளிடம் என்ன ஏதாவது வேண்டுமா எனக் கேட்க லாவண்யா புன்னகைத்தாள்.  ஆயிரம் அர்த்தம் உடைய புன்னகை.அவள் சித்திக்கு மனதை ஏதோ செய்தது. லாவண்யா சித்தி நான் தீபாவளி கொண்டாடும் மனநிலையில் இல்லை அதனால் எனக்கு dress எதுவும் வேண்டாம் என்று கூறினாள்.

     லாவண்யா தன் வாழ்வின் சந்தோஷம் என்பது தன்னை போல இருப்பவர்களுக்கு உதவி செய்வது என உணர்ந்தாள்.

உயிரின் உயிராய்Where stories live. Discover now