சிவா வாட்ச்சில் டைம் பார்த்தான். மணி 5:00 இருக்கும். லாவண்யா 4:00 மணிக்கே கோவிலுக்கு வர சொன்னாள். ஒரு மணிநேரம் லேட் கத்த போறா என நினைத்து கொண்டான்.
அங்க பார்த்தா லாவண்யாவை காணோம் ஒரு அழகான பொண்ணு ஏதோ ஒரு angle LA light ஆ லாவண்யா மாதிரி இருக்கா.
பிங்க் வித் கோல்டன் கலர்ல சாரி.நீள பின்னல் ,பெரிய ஜிம்மிகி,கலர்கலரா வளையல். அப்படியே கோவில் சிலை மாதிரி இருந்தா.
சிவாவலா நம்பவே முடியவில்லை அவள்தான் லாவண்யா என்று.இவ இவ்ளோ அழகா இருக்க மாட்டாளே,அதுவும் இப்ப இருக்க situation கு அன்னை தெரஸா மாதிரி white saree ல கட்டனும் என நினைத்து கொண்டே அவள் முன் நின்றவன்.
Aunty இங்க ஒரு college பொண்ணு யாரயாச்சும் பாத்திங்கலா என்றான் நக்கலாக.
இல்லை என தலை அசைத்துவிட்டு அவன் கொஞ்சம் தூரம் போனவுடன் ,பெரியவரே அந்த பக்கம் போய் பாருங்க என்றாள்.
என்ன நா இவளுக்கு பெரியவரா என நினைக்கும் போதே
அய்யோ வயசு ஆனதால வாழும் கேட்கல போல இருங்க பெரியவரே கண்ணு தெரியாம விழுந்திர போரிங்க என்றாள்.
சிவா அவள் அருகில் வந்து ஒன்கிட்டலாம் பேசி ஜெய்க்க முடியாது ,வா போலாம் என அழைத்து சென்றான்.
சாமி கும்பிட்டு முடித்தவுடன் எதுக்கு கூப்ட என்றான் சிவா.
அது உன்கிட்ட ஒன்னு சொல்லனும் அதான்.
சொல்லு சீக்கிரம் டைம் ஆச்சு என்றான்.