சிவா சென்னைக்கு வருவதாக கூறியதை கேட்டு அதிர்ந்தான் ரவி.இப்ப எதுக்கு டா என்றான் ரவி.
இந்த project finish டா.அதனால் ஒரு 20 நாட்கள் நடுவுல லீவ் இருக்கு .
சரி டா .நா எனக்கும் லீவ் கேட்டு எங்கயாச்சும் ஊட்டி ,கொடைக்கானல் னு சுத்திட்டு வருவோம் என்றான் ரவி.
ஏன் டா .அங்க வந்தா லாவண்யா வ பாத்து feel பண்ணுவேனு நினைக்கிறியா.அப்படிலாம் இல்ல அவ happy ஆ இருந்தா எனக்கு போதும் டா என்றான் சிவா.
அவ இருந்தா தான என நினைத்தான்.
இல்ல சிவா.நா அப்படி சொல்லல .எனக்கு ரொம்ப போர் அடிக்குது அதனான் என்று சமாளித்தான் ரவி.
சரி அப்ப நா date சொல்ரேன் என்று போனை வைத்தான் சிவா.display ல் லாவண்யா சிவாவின் முடியை பிடித்து இழுத்து கொண்டிருக்கும் சிறுவயது படத்தை பார்த்து சிரித்தான்.
ரவி இவன எப்படி சமாளிக்கிறது என யோசித்து கொண்டு இருந்தான்.நடந்த விஷயம் எனக்கே இவ்ளோ இதா இருக்குனா சிவா இத எப்படி எடுத்துக்குவான் என நினைத்தபடியே லாவண்யாவிற்கு கால் செய்தான் வழக்கம் போல switch off.
பாவி.போன் ஆன் பண்ணவே மாட்டாளா.நிஜமாவே இருக்கியா இல்லயா என லாவண்யாவை மனதிற்குள் திட்டி கொண்டு இருந்தான்.
மறுபடியும் சிவா கால் செய்தான்.
சொல்லு டா என்றான் ரவி.
லாவண்யா எப்படி இருக்கா என்றான் சிவா அழுத்தமான குரலில்.
தெரியில டா.நல்லா தான் இருப்பா என்றான் ரவி பயத்துடன்.
பொய் பேசாத ரவி. உன்ன நம்பி தான நா இங்க வந்தேன்.கோர்ட்ல நடந்த கேஸ் விஷயத்த ஏன்டா சொல்ல ல என்றான் சிவா.
Tension ஆகாத .நீ நினைக்கிற மாதிரி லாம் இல்ல அவ நல்ல பொண்ணு என இவனே எல்லாத்தயும் உளறி கொட்ட இது எப்படி நடந்துச்சு என்றான் சிவா பதட்டத்துடன்.