உயிர்-26

3.1K 145 167
                                    

லாவண்யாவால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவள் பார்த்தது அவரே தான்.

சும்மா formality Ku நாலைந்து கேள்வி கேட்டுவிட்டு கேஸை தள்ளி வைத்தார் ஜட்ஜ்.

லாவண்யாவிற்கு அங்கு பேசியது எதுவும் நியாபகம் இல்லை .பேய் அறைந்த மாதிரி இருந்தாள்.

எப்படியும் இந்த கேஸில் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்தாள்.அன்னை இல்லம் பறி போக போவதை அவளால் உணர முடிந்தது.

நான்கு நாட்கள் கழித்து ஒரு காலை வேளையில் லாயர் கால் செய்தார்.

பாப்பா நம்ம கேஸ டீல் பண்ண ஜட்ஜ் கேஸ ல இருந்து மாறிட்டாரு.வேற ஜட்ஜ் மா லேடி வேற.so நீ பயப்படாத கண்டிப்பா நாம தான் winning.

லாவண்யாவிற்கு ஒன்னுமே புரியவில்லை. இது ஒரு நல்ல சான்ஸ் .ஏன் இப்படி பண்ணாரு என யோசித்து கொண்டு இருந்தாள்.

கோமதி அம்மாவின் கணவன் தான் அந்த ஜட்ஜ்.

கோமதி அம்மாள் குணத்தில் சிறந்தவர். கிராமத்தில் வளர்ந்தவர்.கல்யாணம் ஆனவுடன் நகரத்துக்கு வந்தவர் அந்த கலாச்சாரத்துக்கு ஏத்த மாதிரி தன்னை மாத்தி கொள்ள ரொம்பவே பாடுப்பட்டார்.

கோமதி அம்மாளின் கணவரிடம் இல்லாத கெட்ட பழக்கமே இல்லை.முதலில் கோமதி அம்மாள் சகித்து கொண்டார்.பின் இந்த அடிமைத்தன வாழ்வை துறந்தார்.கோமதி அம்மாளின் 7 வருட உழைப்பே இன்றைய 'அன்னை இல்லம்'.

சிந்தனையில் மூழ்கி இருந்த லாவண்யாவை அவள் போன் அழைத்தது.

புது நம்பர்.ஒருவேளை சிவாவாக இருந்தால் உடனே கட் பண்ணிரலாம் என யோசனையுடனே போனை எடுத்து ஹலோ என்றாள்.

நா ஜட்ஜ் பேசறேன் என்று கரகரப்பான ஆண் குரல் கேட்டது.

பாத்தியா  இப்ப கூட கோமதி அம்மாவோட husband னு சொல்ல வாய் வரல என மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

சொல்லுங்க சார் என்றாள் லாவண்யா.

நா இந்த கேஸ டீல் பண்ணல மா என்றார்.

உயிரின் உயிராய்Where stories live. Discover now