சிவா கூறியதையே நினைத்து கொண்டு இருந்தாள் லாவண்யா.அவனின் குணம் அவளை வெகுவாக ஈர்த்தது.
நன்றாக படித்து வந்த சிவா ஏன் திடீரென படிப்பில் கவனமின்றி இருக்கிறான் என அனைவரும் குழம்பினர்.படிப்பை தவிர அனைத்திலும் முதல் மாணவனாக வந்தான்.அவனுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்றும் அவன் விளையாட்டுத்தனமாகவே இருப்பதாகவும் அனைவரும் கருதினர்.
லாவண்யாவை தவிர.
சிறு வயதில் இருந்தே அவனுடன் இருப்பவள் அவன் செய்கையில் ஏதோ உள்அர்த்தம் இருப்பதை உணர்ந்தாள்
அவனிடம் பல திறமைகளையும் புத்திக்கூர்மையும் அவள் மட்டுமே அறிந்தது. ( எப்ப பாரு இந்த பொன்னு சிவாவையே பார்த்துகிட்டு இருக்கு.தப்பாச்சே)
போன chapter ல பல்லை காட்டி கிட்டு இருந்த சிவா இன்னும் அப்படியே இருந்தா எனக்கு தான் திட்டு விழும்
ஆனா சிவா அவனின் மாற்றத்திற்கான காரணத்தையும் லாவண்யா விடம் சொல்லிவிட்டு வேற ஒரு விஷயத்தையும் கூறி விட்டு சென்றான்.
காரணம்:
பள்ளியில் முதல் மூன்று ரேங்க் எடுக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அளிக்கப்படும். தன்னுடன் படிக்கும் சில ஏழை மாணவர்களுக்காக சிவா தன் மதிப்பெண்களை விட்டு கொடுத்தான். அதற்காக அவன் படிக்காமல் இருக்கவில்லை நிறைய படித்தான்.கிரிக்கெட் ல் மாவட்ட அளவில் தேர்வானான்.கூடைப்பந்திலும் பல பரிசுகள் பெற்றான்.அவனது ஏழை நண்பனிடம் இதை விட்டு கொடுப்பதற்காக அவனுக்கு தெரிந்த தெலுங்கு மொழியை கற்று தரும் படி கேட்டு தற்போது சிவா சரளமாக பேசும் திறன் பெற்றான்.
(இப்படியே போனா போர் அடிக்கும் . அதனால கொஞ்சம் fast ஆ போக போரேன்)சிவாவின் 10th result வரும் நாள்:
லாவண்யா வேண்டாத தெய்வம் இல்லை.அவன் நினைத்த மதிப்பெண் கிடைக்க வேண்டும் என்ற பயம் அவளுக்கு.
சிவாவின் மதிப்பெண்களை பார்த்து அனைவரும் அதிர்ந்தனர்.அவன் தாய் மயங்கி கீழே விழுந்தாள்.