காலையிலேயே லாவண்யா எழுந்து போய் சிவாவின் அலார்த்தை ஆப் பண்ணிவிட்டு வெற்றி சிரிப்புடன் வெளியே வந்தாள்.
வெளியே மஞ்சு பாட்டி கொடூரமாக முறைத்து கொண்டு இருந்தார்.
மாடிக்கு வா என அவளை இழுத்து கொண்டு சென்றார்.
உன் மனசு ல என்ன தான் நினைச்சிட்டு இருக்கு.நீ பண்றது தப்பு நா உன் கூட எங்கயும் வரல என்றார் கடகடவென
லாவண்யா சிரித்தபடியே , உன்ன தான் அழகி நினைச்சிட்டு இருக்கேன் என்று அவர் கன்னத்தை கிள்ளியபடி தொடர்ந்தாள்.
என்ன பாட்டி பெரிய தப்பு பண்ணிட்டேன்.நீ ஒரு நாள் அந்த மேத்ஸ் புக் வாங்கி பாரு அப்ப உனக்கே புரியும் என்றாள்.
அடியே லூசு.நேத்து சிவா கம்பெனி ல இருந்து அவன வெளிநாடு அனுப்புறதா சொல்லி இருக்காங்க .நல்ல சம்பளம் லைப் அப்டியே அழகா செட்டில் ஆயிரும்.பயங்கர போட்டி இந்த வேலைக்கு ஆனா சிவாவுக்கு தேடி வந்துச்சு பட் அவன் உனக்காக விட்டுட்டான் என்றார் பாட்டி.
எனக்காகவா புரியலயே.எனக்கு மேத்ஸ் சொல்லி தரணும் னு சொல்லியா அவன் அந்த ஆப்பர் அ விட்டுடான்.அட கடவுளே முதல்ல அவன துரத்தி விடனும் என்றாள் சிரித்து கொண்டே.
மஞ்சு பாட்டிக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை பளாரென லாவண்யாவின் கன்னத்தில் அறைந்து விட்டார்.
உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சு ல.கொஞ்சமாச்சு பொறுப்புணர்ச்சி இருக்காடி உனக்கு.அந்த லேனா கிட்ட என்ன சீக்கீரட் பேசிகிட்டு இருக்க .உனக்காக அவன் எல்லாத்தயும் விட்டுட்டு நிக்கிறான் நீ அப்படியே உன் இஷ்டத்துக்கு போ போறியா என்றார் கோவத்துடன்.
பாட்டியின் பேச்சை ரீவைண்ட் செய்து பார்க்க பாட்டி எதை பற்றி பேசுகிறார் என புரிந்தது லாவண்யாவிற்கு.
விதியின் வசத்தால் நடப்பதே நடக்கும் என லாவண்யா அங்கிருந்து செல்ல முற்பட்டாள்.பாட்டி அவள் கையை இறுக்கமாக பற்றி, உனக்கு என் மேல இருக்குற மரியாதை அவ்ளோ தான் னு நா எடுத்துக்கவா என்றார்.