உயிர்-8

4.7K 174 45
                                    

சிவா ஈரோட்டில் உள்ள பிரபல பள்ளியில் சேர்க்கப்பட்டு இருந்தான்.              
முதலில் வாரம் இருமுறை இருந்த விடுமுறை பின் ஒரு நாளாக குறைக்கப்பட்டது.
லாவண்யா அவனை ரொம்ப மிஸ் பண்ணினாள். அவன் இல்லாமல் வேனில் போவதற்கு சலித்து கொண்டாள். இப்படியே ஒரு வருடம் ஓடி விட்டது.கோடை விடுமுறை 15 நாட்களாக சிவாவிற்கு அறிவிக்கப்பட்டது. லாவண்யாவிற்கு உற்சாகம் தாங்கமுடியவில்லை. மறுபடியும் பழய படி விளையாடினர்.லாவண்யா பல கதை பேசினாள்.
      சிவா மீண்டும் பள்ளி செல்லும் நாள் வந்தது. இந்த முறை லாவண்யா அவனை மகிழ்ச்சியாகவே வழி அனுப்பி வைத்தாள்.அவன் 12th என்பதால் half yearly விடுமுறை கிடையாது என அறிவித்தனர்.
    அதனால் இந்த முறை லாவண்யா அவள் அத்தை வீட்டுக்கு சென்றாள்.அவள் தம்பியை உடன் அழைத்து செல்ல மறுத்து இவள் மட்டும் சென்றாள்.
   விடுமுறை நன்றாக சென்றது.அந்த நாள் வரும்வரை.
                                சுனாமி.         

26/12/2004

       நாம் யாரும் அறியா ஒன்று.கல்வி அறிவு பெற்றவர்களே என்ன நடந்தது என்பதை கூற இயலவில்லை.  எல்லாம் கண் இமைக்கும்  நேரத்தில் நடந்தது. 
லாவண்யாவிற்கு அன்று காலையில் ஏதோ கெட்ட கனவு தோன்ற பயந்த படியே அவள் அம்மாவிடம் பேசினாள்.
        பேசிய பின் ஏதோ ஆறுதலாக தோன்ற நன்றாக உறங்கினாள்.அவள் கண் விழித்த போது அவள் அத்தை வீட்டில் news ஓடிக் கொண்டு இருந்தது. Newsல் சுனாமி தாக்கி தமிழகம் புரண்டது என்று ஓடி கொண்டு இருந்தது.
  முதலில் இதை சாதாரணமாக பார்த்தவள் பின் அவர்கள் இருக்கும் ஏரியாவையும் புயல் தாக்கி இருப்பதை அறிந்தாள்.என்ன செய்வது என்றே தெரியவில்லை.
   அழ தோன்றியது ஆனால் அழ முடியவில்லை அவளால். உடனே வீட்டிற்கு போக வேண்டும் என்றாள். யாரும் எதுவும் பேசவில்லை.
     லாவண்யாவிற்கு புரிந்தும் புரியாததை போல உணர்ந்தாள். அவளுக்கு போகும் போது அவள் தம்பி கூறியது நியாபகம் வந்தது.நீ என்ன விட்டுட்டு போறல்ல நானும் விட்டுட்டு போவண்டி என்று கூறினான். அதையே அவள் வீட்டில் உள்ளவர்களும் செய்தனர்.
  அனைவரும் லாவண்யாவை தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

உயிரின் உயிராய்Donde viven las historias. Descúbrelo ahora