உயிர்-39

2.9K 130 61
                                    

மறுநாள் காலை சிவா வேகவேகமாக வேலைக்கு கிளம்பி கொண்டு இருப்பதை பார்த்தாள் லாவண்யா.இரவு ரொம்ப நேரம் கண்விழித்து யோசித்தபடி இருந்ததால் காலையில் எழ தாமதமாகி விட்டது.இவள் இப்படியே நின்று கொண்டு இருப்பதை பார்த்து கிட்சனிள் இருந்த மஞ்சு பாட்டி சத்தமிட்டார்.

ஏம்மா லாவண்யா அங்க என்ன பண்ற.இங்க வா கொஞ்சம் இதெல்லாம் எடுத்து வை சிவா கிளம்பனும் என்றார்.

ம்ம்ம் சரி பாட்டி என்றபடி வேலைகளை முடித்தாள்.

சிவா சாப்பிட்டவுடன் கிளம்பி விட்டான்.எதுனாலும் கால் பண்ணு என்று எச்சரித்து விட்டு.

வீட்டில் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்து முடித்த பின்னர் மஞ்சு பாட்டி ஓய்வு எடுக்க சென்று விட்டார்.லாவண்யாவிற்கு போர் அடித்தது.

அவ வாழ்க்கை எப்பவும் ஓட்டம் தான்.இந்த மாதிரி சும்மா இருந்து பல வருஷம் ஆகிவிட்டது. ரொம்பவே போர் அடிக்க ரவிக்கு கால் செய்தாள்.

யாரு நீங்க என்றான் ரவி முதல் கேள்வியாக.

டேய் அண்ணா இரண்டு நாள்ல என்ன மறந்துட்ட .அண்ணி யாருடா என்றாள் லாவண்யா.

அண்ணி யா ஒரு பன்னி கூட என்னை பாக்க மாட்டேங்குது நீ வேற.ஏன்டி நீ பாட்டுக்கு சிவா கூட பெங்களூர் போய்ட்ட என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா.உனக்கு என்னாச்சு ஏதாச்சோ னு பதறி போய்ட்டேன் என்றான் ரவி.

டேய் சிவாஜி நடிக்காத டா.நீயும் அந்த பக்கியும் சேர்ந்து தான டா எல்லா பிளானும் பண்றீங்க.நா தான் உன்கிட்ட கோவப்படனும் என்றாள் லாவண்யா.

சரி விடு.அந்த சிவா ஒரு ஓட்டை வாய்.நீ உடனே இந்த அண்ணன புகழாத தங்கம்.எனக்கு எங்க சிலை வைக்கலாம் னு தான யோசிக்கிற என்றான் ரவி.

இப்படியே செல்ல சண்டைகளுடன் இருவரும் பேசியபடி இருந்தனர்.

அடுத்த என்ன பிளான் என்றான் ரவி.

ஒரு பிளானும் இல்ல .எங்கயும் போக கூடாதாம் ஹிட்லர் சொல்லியாச்சு என்றாள் லாவண்யா.

நீ கண்டிப்பா மென்டல் ஹாஸ்பிடல் தான் போக போற பாரு.எதாச்சும் காலேஜ் ல சேரு மக்கு என்றான் ரவி.

ஆமா ல சூப்பர் ஐடியா டா.அறிவு அண்ணா .இந்த சிவா உன்கூட இல்ல ல அதான் இவ்ளோ ஷார்ப் ஆயிட்டியா இல்ல அண்..ணி என்றாள்

லாவண்யா செல்லம் .நீ அந்த சிவா கூட சேர்ந்து ரொம்ப பேட் ஆய்ட்ட .நா அப்புறம் பேசுரேன் பை என ரவி போனை வைத்து விட்டான்.அவனை அறியாமல் அவன் இதழில் சிறு புன்னகை.

மாலை ஒரு எட்டு மணி அளவில் சிவா வீடு திரும்பினான்.அவன் வந்த உடனே லாவண்யா ஆரம்பித்து விட்டாள்.

சிவா சிவா காலேஜ் சேரவா.என்ன படிக்கலாம் சொல்லு சொல்லு ன பிடுங்கி எடுத்தாள்.

சிவா ஆபிஸில் வேலையில் பயங்கர களைப்பாக இருந்தான்.அவனுக்கு இவள் நடந்து கொண்டது கோவத்தை வரவழைத்தது.

உள்ள போ மா.அப்புறம் பேசலாம் என்றான் சோர்ந்த குரலில்.

நம்ம லாவண்யா தான் மக்கு ஆச்சே.கொஞ்சம் கூட புரிஞ்சிகாம போடா ஹிட்லர்.பெண்கள் ல நீங்க அடக்கி ஆண்ட காலம் லாம் முடிஞ்சிருச்சு.நீ நினைக்கிற மாதிரி என்னால வீட்லேயே லாம் இருக்க முடியாது என அவன் மனம் புரியாமல் வீர வசனம் பேசி கொண்டு இருந்தாள்.

ஆமா  எதையும் கேட்காமலே பாத்து  பாத்து   செஞ்சேன் ல எனக்கு இதுவும் தேவை தான் என எங்கோ பார்த்த படி சிவா கூற லாவண்யாவின் கோவம் அதிகமானது.

நா உன்னை சார்ந்து இருக்கறதால தான இப்படி லாம் பேசுற.எனக்கு தெரியும் இந்த மாதிரி தான் ஆகும்.சொல்லி காட்டிட்டல்ல என பேசும் போதே லாவண்யா கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

அய்யோ லூசு.நா அப்படி சொல்ல ல டி .கொஞ்சம் ஆபிஸ் டென்ஷன் என சிவா பேசி கொண்டு இருக்கும் போதே ரூம்க்குள் போய் கதவை டொப் என அடைத்தாள்.

இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த மஞ்சு பாட்டி என்னப்பா இது என்பது போல சிவாவை பார்த்தபடி இருந்தார்.

ஒரு 2 மணி நேரம் கழித்து லாவண்யாவை சாப்பிட அழைத்தார் மஞ்சு பாட்டி.உடனே வெளியே வந்தாள்.முகம் வீங்கி இருந்தது.

யாரிடமும் ஒன்றும் பேசாமல் சாப்பிட்டு முடித்தாள்.சிவாவும் எதுவும் பேசவில்லை. மஞ்சு பாட்டி தான் இருவரையும் சமாதனாப்படுத்த படாதபாடு பட்டார்.

இரவு இருவரும் அவரவர் அறைக்கு சென்றனர்.நாம கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாமோ என இருவரும் நினைத்தபடி அன்று இரவு தூக்கத்தை தொலைத்தனர்.

உயிரின் உயிராய்Where stories live. Discover now