கல்யாண கலை என்பதே இல்லாமல் போயிற்று கனி மற்றும் ரவியின் வீட்டில்.
பாட்டி லாவண்யா வந்தால் மட்டுமே சாப்பிடுவேன் என அடம் பிடிக்க சிவா வேறு வழியின்றி அவளை தேடி சுற்றிக்கொண்டு இருக்கிறான்.இப்போ கூட சார் போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டு லாவண்யாவை நன்கு வசைபாடிக்கொண்டு இருந்தான்.
இந்த லூசலாம் கண்ணாமூச்சி விளையாடும் போதே கண்டுபிடிக்கிறது கஷ்டம் இதுல அய்யோ என நொந்து கொண்டு இருக்க அவன் அலைபேசியோ
"உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி" என பாட எல்லாம் நேரம் மொத வேலையா இந்த பாட்ட நாம மாத்தனும் என தன்னுள் பேசியபடி போனை பார்க்க அழைப்பது தன்னுடைய உயரதிகாரி என அறிந்து விரைந்து அட்டன் செய்தான்.
வணக்கம் சிவா என மிகுந்த கடினத்துடன் அவர் கூறினாலும் அது சிவாவிற்கு இனிமையாகவே பட்டது.
சிவாவின் உயரதிகாரியான அவருக்கு ஒரு விசித்திர பழக்கம். அது என்னவென்றால் அந்தந்த மொழியினரிடம் அவர்களின் தாய்மொழியில் பேசுவது.
சில பொது விசாரிப்புக்கு பின் ஒரு உதவி சிவா என இழுத்தார் அவர்.
சொல்லுங்கள் சார் என்றான் சிவா.
நாளை சென்னையில் அவர்கள் கம்பெனியின் சார்பில் மிக பெரிய கலந்துரையாடல் நடக்க போவதாகவும் அதற்கு கவர்னர் முதற்கொண்டு வருவர் நம் பெங்களுர் கிளை சார்பில் போக வேண்டிய என்னால் செல்ல இயலவில்லை என்றும் தனக்கு பதிலாக சிவாவை செல்லும்படி வேண்டினார்.
சிவாவும் சரியென சம்மதித்தான். அடுத்து நடக்க போவது நீங்கள் அனைவரும் எதிர்பார்த்தது போலவே சிவா லாவண்யா சந்திப்பு தான்.
விழா முடியும் வரை சிவா பொறுமை காத்தான்.அதன்பின் லாவண்யாவை நோக்கி சென்று அவன் தோளோடு சேர்த்து இருக்கமாக பற்றினான். லாவண்யாவோ எந்த வித எதிர்ப்பும் காட்டாமல் அவன் செல்லும் திசை நடந்தாள்.