உயிர்- 48

3.7K 105 55
                                    

லாவண்யாவை காணாமல் தேடிய ரவிக்கு அவள் கடத்தப்பட்டு இருப்பாளோ என சந்தேகம் எழுந்தது.

உடனே லேனாவிற்கு கால் செய்து விவரத்தை கூற புயல் வேகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கியது.

பாட்டியை ஒருவழியாக சமாளித்த ரவி,சிவாவிடம் கூறினால் கண்டிப்பாக பூகம்பம் வரும் என அறிந்து அவனிடம் எதுவும் கூறாமல் மறைத்துவிட்டான்.

லாவண்யா டிராவல் பேக்கை முதலிலே ரவியுடம் கொடுத்து விட்டதால் லேனா அதில் இருந்து தேவையான கோப்புகளை எடுத்து கொண்டாள்.

மேலும் அவளது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாள்.அவளது கணிப்பு படியே எல்லாம் நடப்பதால் பதட்டம் அடையாமல் இருந்தாள்.

லேனா வேறு யாரும் இல்லை இன்னும் பத்து நிமிடத்தில் உதவி கமிஷனராக பொறுப்பு ஏற்க போகும் சிறப்பு பிரிவு அதிகாரி.

பிறந்த மாநிலம் -கர்நாடகா.இந்தியாவின் பல இடங்களுக்கு பணிமாறுதல் செய்யப்பட்டவர்.ஆனால் அவர் போகும் அந்த மாநிலத்தை அதிரவைக்கும் அளவுக்கு ஒரு சம்பவத்தை நிகழ்த்தும் திறமைசாலி.

இராஜசேகரின் மேல் இருக்கும் பற்பல குற்றங்களை ஆராய்ந்து தண்டனை பெற்று தருவதே ஒரே குறிக்கோள் என தீர்மானித்தார்

வருண் லாவண்யா விவகாரம் கேள்விப்பட்டே லாவண்யாவிடம் பேச்சு குடுத்து  அவளுக்கு புரியவைத்தார்.நம்ம மக்கு லாவண்யாவுக்கு கோர்ட் கேஸ் நடப்பதற்கு முன்னரே வருணின் சுயரூபம் தெரிய வைத்தது லேனாவே.

இந்த கேஸில் லாவண்யா நிறைய பிராடு வேலை பண்ண அது தாமதமாகவே இராஜசேகரின் காதை எட்ட இப்பொழுது பிரச்சனை பூதாகரமானது.

லாவண்யா வருணின் சுயரூபத்தை அறிந்து முதலில் வருந்தினாலும் பின்னர் தெளிந்துவிட்டால் லேனாவின் உதவியால் அந்த வலியில் இருந்து வெளிவந்தாள்.(சிவாவும் ஒரு காரணம் தான்)

வருணை பற்றி எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல பழகி நிறைய ஆவணங்களை பறித்து விட்டனர்.

வருணிற்கு அவன் தந்தை இராஜசேகர் அளவு கூட அறிவு கிடையாது.லைட்டா எதாச்சும் குழப்பினாலே உண்மை வெளிவந்துவிடும்.வருணுக்கு அந்த அளவு கல்வி அறிவும் இல்லாத்ததால் லூசு மாதிரி காலேஜ்ஜில் தன் அப்பாவின் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் என எடுத்து குடுத்து விட்டான்.

இராஜசேகர் தன் நரி தந்திரத்தால் சம்பாதித்த 1.2 கோடி மதிப்புள்ள பங்களாவின் பத்திரத்தை வருணின் எட்டாம் வகுப்பு ஸ்போர்ட்ஸ் சான்றிதழுடன் சேர்த்து லேமினேட் செய்து வைத்து இருந்தான்.

இராஜசேகரின் முதல் சொத்து மட்டுமின்றி அது அவனுக்கு மிகவும் ராசியானது.அதனால் அந்த சான்றிதழை பத்திரமாக வைத்து இருப்பான்.அந்த சான்றிதழ் வருணுக்கும் சிறப்பு வாய்ந்தது. அவன் வாழ்க்கையில் முதல்முறையாக அவன் உழைப்பில் வென்ற பரிசல்லவா அது.

அதனால் தான் அப்பா அதற்கு தனி கவனம் செலுத்துவதாக வருண் நினைத்து கொண்டு இருந்தான்.வருணை ஒரு அளவு குழப்பி சான்றிதழ்களை பறித்த லாவண்யாவிடம் லேனா இதை தெரிவிக்க ஒருநாள் லாவண்யா அதை கண்டுபிடித்தும் விட்டாள்.

பின்னர் வருணின் ஒவ்வொரு சான்றிதழ்களையும் பார்க்க எல்லாம் இரண்டு இரண்டு சான்றிதழ்களாக இருந்தது.

இராஜசேகரின் பல்வேறு திருட்டு  வேலைகள் வெளிவந்தது.

லாவண்யா காணாமல் போய் 2 நாள் ஆகிவிட்டது. அவளை பற்றி எந்த தகவலும் இல்லாமல் அனைவரும் திணறிக் கொண்டிருந்தனர்.

இதில் நல்ல செய்தி  என்னவென்றால்  ராஜசேகர் கைதானது மற்றும்  அவனது சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.

லேனா தன்னால் இயன்ற அளவு லாவண்யாவை தேடி விட்டார்.எந்த ஒரு சின்ன தடயமும் இல்லை.

ஒரு பக்கம் பாட்டி, கனி இருவரும் கோவில்,விரதம் என இருக்க இன்னொரு பக்கம் ரவியும் லேனாவும் லாவண்யாவை தேடி அலைந்தனர்.

(நம்ம ஹீரோ சிவாக்கு என்ன ஆச்சு என்று தானே எல்லோரும் யோசிக்கிறீங்கனு தெரியுது.)

லாவண்யா கடத்தப்பட்டதை அறிந்த சிவா கோவத்தின் உச்சிக்கு சென்று பின் பைத்தியமாக மாறி விட்டான்.

(அய்யோ நல்லா இல்லயே ஹீரோ பைத்தியம் னு சொல்லி சப்-ஹீரோ வருண் னு சொன்னா என்ன கொண்ணுருவாங்களே🤣🤣🤣)

யாரும் கோவப்பட கூடாது சிவாக்கு நிஜமா பைத்தியம் லாம் பிடிக்கல ஆனா அவன் பண்ண வேலைய பாத்து எல்லாருக்கும் பைத்தியம் பிடிக்காத குறை தான்.

உயிரின் உயிராய்Où les histoires vivent. Découvrez maintenant