லாவண்யா சாப்பிட்டு முடித்தவுடன் வருண் சிவாவுக்கு கால் பண்ணி வர சொல்றேன் என்றாள்.
இல்ல மா நானே உன்ன drop பண்ணிறேன் என்றான்.
சரி அப்ப நா அவன் கிட்ட தகவல் சொல்லிறேன் என்றாள்.
பலமுறை கால் செய்தும் சிவா எடுக்கவில்லை .10 மணி ஆனதால் வீட்டிற்கு போய் இருப்பான் என ரவிக்கு கால் செய்தாள்.
ரவியிடம் பேசிய லாவண்யா அப்படியே மயங்கி விழுந்தாள்.
வருண் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தான். அங்க restaurant ல் உள்ள டாக்டர் வந்து பார்த்துவிட்டு ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டு சென்றார்.
லாவண்யா வெறித்து பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்.
என்னாச்சு மா ரொம்ப tired ஆ இருக்கா என்றான் வருண் அவள் தலையை கோதியபடி.
இல்ல வருண்.நா போறேன் என்றாள்.
இரு மா நானே கூட்டிட்டு போறேன் என அவளை மெதுவாக பைக் அருகே தூக்கிட்டு போனான்.
வருண் என்ன இது . என்ன விடுங்க என லாவண்யா கையை உதறினாள்.
அவன் அவளை இறக்கி விட்டவுடன் பளாரென அவன் கண்ணத்தில் அடித்தாள் லாவண்யா.
வருண் எதுவும் புரியாமல் முழிக்க சாரி என சொல்லி விட்டு வேறு பக்கம் திரும்பி கொண்டாள் லாவண்யா.
இல்ல பரவால்ல நான் தான் நீ ரொம்ப பலவீனமா இருக்க னு நினைச்சு தூக்குனேன்.பட் மேடம் ரொம்ப strong என்றான்.
லாவண்யா லேசாக சிரித்தாள்.வருண் அவன் பைக்கில் இருந்து ஒரு கிப்டை எடுத்து லாவண்யாவிடம் கொடுத்தான்.
லாவண்யா அதை பிரித்து பார்த்தாள். அழகான குட்டி நாய் பொம்மை.வெள்ளை நிறத்தில் ரொம்ப கியூடாக இருந்தது.
எனக்கு இது பிடிக்கும் னு யார் சொன்னா என்றாள் லாவண்யா.
என் குழந்தைக்கு என்ன பிடிக்கும் னு எனக்கு தெரியாத என்ன என்றான்.
அழகா இருக்கு .யார் மேலயோ இருந்த கோபத்துல உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திடேன் சாரி என்றாள் லாவண்யா.
சரி டைமாச்சு போலாம் என அவளை 'அன்னை இல்லத்தில்' drop செய்தான்.
லாவண்யா ஒருமுறை அன்னை இல்லத்தை பார்த்து பெருமூச்சு விட்டாள்.உன்ன என்ன ஆனாலும் விட மாட்டேன் நீ என்னோட அம்மாவின் கருவறை மாதிரி என நினைத்தாள். உடம்பு சிலிர்த்தது.
கொஞ்ச தூரம் உள்ள சென்ற பிறகு யாரோ தன்னை பார்ப்பது போல் உணர்ந்தாள். அங்கு சிவா நின்று கொண்டு இருந்தான்.
லாவண்யா உன்கிட்ட கொஞ்சம் பேசனும் என்றான்.
இப்ப உனக்கு என்ன வேணும் சீக்கிரம் சொல்லு என்றாள்.
வருண் நல்லவன் இல்ல .அவன் அந்த இராஜசேகரின் பையன்.அவன் ஒரு பொருக்கி.அவன் இதுக்கு முன்னணி engineering college ல படிச்சான்.படிப்பு அவனுக்கு வராத ஒரு விஷயம்.அவன் உன்ன நல்லா ஏமாத்துறான்.
Just shut up சிவா.லிமிட் தாண்டி பேசாத அவன் எம்எல்ஏ பையனு எனக்கு தெரியும்.
தெரியுமா பைத்தியமா நீ .அப்புரம் என் அவன்கிட்ட பேசுற லூசு.
ஏன்னா அவன் என்கிட்ட உண்மையா இருந்தான்.அவங்க அப்பா வ பத்தி என்கிட்ட சொன்னான் .அவன் கிட்ட உண்மை இருக்கு உன்ன மாதிரி இல்ல.
நா என்ன பண்ணேன் - சிவா.
என்ன எதுக்கு cheat பண்ற .நீ என்கிட்ட பழகுறது எல்லாம் friendship மட்டும் இல்ல னு எனக்கு தெரியும். இப்படி purpose ஆ பழகற உன்ன மாதிரி ஆள் கிட்ட இருந்து தான் தள்ளி இருக்கனும். எனக்கு எல்லாம் இப்ப தான் clear ஆ புரிஞ்சிக்க முடியுது.தயவு செஞ்சு என் மூஞ்சில்ல முழிக்காத என்று கூறிவிட்டு லாவண்யா சென்று விட்டாள்.
சிவாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. வருண் உண்மையா லவ் பண்ணவும் ,chance இல்ல.இவ வேற எதுக்கு ஏதோ கத்திட்டு போறா ஒரு வேளை நாம pick up பண்ண போலனு கோவமா இருக்கும் என நினைத்தப் படி சிவா சென்று விட்டான்.