உயிர்-41

3K 145 94
                                    

லாவண்யா அவனையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்.

அய்யயோ லுக் தப்பா இருக்கே என்று நினைத்தவன் பேச்சை மாற்றுவதற்காக நீ எப்போ கன்னடம் கத்துக்க போற என்றான்.

லாவண்யா எதுவும் பேசாமல் அவனையே பார்த்து கொண்டு இருக்க பாட்டி என கத்தினான் சிவா.

சட்டென்று நினைவுக்கு வந்தவள்.டேய் எரும என்ன டா இப்பலாம் பாட்டி பாட்டி னு கத்துற என்றாள்.

நைஸ் நேம் ல.அன்னிக்கி கனவுல கூட அப்படி தான் பாட்டி னு கூப்டேனே என்று லூசுத்தனமாக கூறியவன் நாக்கை கடித்து கொண்டான்.

என்னது கனவுலயுமா.அங்கயும் ஏன் டா என்ன இப்படி கலாய்க்கிற என்றாள்.

நா எங்க டி கலாய்ச்சேன்.நீ லவ் பண்றதா லாம் சொன்னியே எல்லாம் கனவுல மட்டும் தான் என்று மனதிற்குள் நினைத்தான்

சரி சரி எப்போ கன்னடம் கத்துக்க போற என்றான்.

காலேஜ் ல சேர்ந்துட்டா சீக்கிரமா எல்லார்கூடவும் பேசி பழகிரலாம் என்றாள் லாவண்யா.

இது நல்ல கதையா இருக்கே .நீ எப்போ ஒரு அளவுக்கு கன்னடம் பேசிறியோ அப்ப தான் காலேஜ் போவ இல்லனா நீ சொன்னியே ஹிட்லர் தான் என்றான்.

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் என்றாள் லாவண்யா.

இல்ல டி நல்லா தெரிஞ்ச இடத்தலயே ஏகப்பட்ட கமெண்ட் அடிப்பாங்க உனக்கு அந்த மொழி தெரியாத தைரியத்தல யாராச்சும் அட்வாண்டேஜ் எடுத்துகிட்டா என்ன பண்ணுவ.ஒழுங்கா சீக்கிரமா பேசி பழகு.தூக்கம் வருது குட் நைட் என சென்று விட்டான்.

லாவண்யா இதுவரை பார்த்தது எல்லாம் தன்னுடன் சண்டை போட்டு கலாய்த்து கொண்டும் விளையாடி கொண்டும் இருக்கும் சிவாவை தான்.தன்மேல் இவ்வளவு அக்கறை எடுத்து ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்யும் சிவா அவளுக்கு புதிதாக தெரிந்தான்.என்னை பத்தி நானே யோசிக்காத விஷயத்தல்லாம் இவன் யோசிக்கிறானே ஏன் ??? நம்ம மேல இவனுக்கு ஏன் இப்படி ஒரு பாசம்?? என்று தன்னை தானே கேள்வி கேட்டு குடைந்தெடுத்தாள.

உயிரின் உயிராய்Where stories live. Discover now