லாவண்யாவின் லாயர் வீட்டில் அமர்ந்திருந்தனர் ரவியும் சிவாவும்.
இருவரும் தங்களை அறிமுக படுத்தி கொண்டனர்.அவர் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தார்.
சார்,லாவண்யாவ பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா என்றான் சிவா.
ஏன் இப்ப நீங்க தெரிஞ்சி என்ன பண்ண போறிங்க என்றார் கோபமாக.
இல்ல சார்.அவ எங்க போனா னு தெரியல என்றான் ரவி.
இவ்ளோ நாள் இல்லாத அக்கறை இப்ப வந்துருச்சா.அவ சின்ன பொண்ணு அவள போய் அவனுங்க சரி விடுங்க இப்ப விசாரிக்க வந்து இருக்கிங்க இவ்ளோ நாள் என்ன பண்ணிங்க என்றார் அதே கோபத்துடன்.
சார் இவன் Bangalore ல இருந்தான்.கொஞ்சம் முக்கியமான வேலை அதான்.நான் அவ hospital ல இருக்கும் போது வந்தேன் ஆனா எங்களுக்குள்ள ஒரு பிரச்சினை அதனால நா அவ கிட்ட பேசாம போய்ட்டேன் என்றான் ரவி.
சார் please கொஞ்சம் இந்த கேஸ பத்தி சொல்லுங்க .எனக்கு என்னோட லாவண்யா ரொம்ப முக்கியம் என்று கண்கலங்கினான் சிவா.
நம்ம எல்லாருக்கும் தெரியும் தம்பி அது பொய் கேஸ் னு பட் அத proof பண்ண முடியல.அதுக்கு காரணம் லாவண்யா sign பண்ணதா போலிஸ் ஸ்டேஷன் ல இருந்த ஒரு FIR .அந்த FIR ல இத போல ஏற்கனவே நடந்த மாதிரியும் போலிஸ் அவள வார்ன் பண்ணி sign வாங்க ன மாதிரி போட்டு இருக்கு.அது எவ்ளோ பெரிய பொய் கதை தெரியுமா. ஒருதடவை லாவண்யா பஸ் ல போறப்ப ஒரு பொண்ணுக்கிட்ட ஒருத்தன் தப்பா behave பண்ணான் . அவன போலிஸ் ல handover பண்ணறப்ப லாவண்யா போட்ட sign அது.அந்த sign வச்சி அந்த எம்எல்ஏ விளையாடிட்டான் என்று கூறி பெருமூச்சு விட்டார்.
அந்த விடியோவ நானே செக் பண்றேன் னு வருண் சொன்னான்.ஆனா எனக்கு அவன் மேல நம்பிக்கை இல்ல அதான் நானே எனக்கு தெரிஞ்ச நம்பிக்கையான இடத்தல செக் பண்ணேன்.ரிசல்ட் நமக்கு நெகட்டிவ்வா வந்துச்சு.இதுல இருந்து அவனுங்க technology பத்தி நல்ல அறிவோட இருக்கானுங்கனு தெரியுது.அந்த கேஸ் டீல் பண்ண நீதிபதி எவ்ளோ சப்போர்ட்டா இருந்தாங்க தெரியுமா என்றார் லாயர்.