உயிர்-25

3K 133 142
                                    

லாவண்யா பலமுறை ரவிக்கு கால் செய்தும் அவன் எடுக்கவில்லை. சிவாவுக்கு கால் பண்ண மனம் ஒத்துழைக்கவில்லை.

அதனால் வருணிடம் பேசலாம் என அவனுக்கு கால் செய்தான்.

இரண்டாவது ரிங்கிலே போனை எடுத்தவன் சொல்லு மா என்றான்.

ஏஏஏய்ய நா உங்க செத்துப் போன பாட்டி பேசுரேன் அம்மா இல்ல என குரலை மாத்தி பேசினாள் லாவண்யா.

அப்படியா பாட்டி . அங்க லாவண்யா னு ஒரு cute ஆன பாப்பா இருப்பா அவங்க கிட்ட குடுங்க please என்றான் வருண்.

ஓய் வருண் .நா என்ன உங்க அம்மா வா 'மா' போட்டு பேசுற என்றாள் லாவண்யா.

எனக்கு அம்மா இல்ல .நீ தான் எனக்கு அம்மா மாதிரி என்றான் வருண்.

கொஞ்சம் நேரம் இருவரும் பேசவில்லை.

என்ன பேச்சையே காணோம் என்றான் வருண்.

இல்ல அப்பா நியாபகம் வந்திரிச்சி என்றாள் லாவண்யா.

பாருடா அப்பா னு சொன்னவுடனே தான் நியாபகம் வருது.ஏதாச்சும் தபால் வந்துச்சா என்றான் வருண்.

ஆமா வருண் அத பேசதான் கால் பண்ணிணேன் . கோர்ட் ல இருந்து வந்து இருக்கு என எல்லா details சொன்னாள்.

என்னக்கி கோர்ட் போனும் என்றவுடன் தான் தேதியை பார்த்தாள் லாவண்யா.

அய்யோ வருண் 28 ம் தேதி டா .நமக்கு exams இருக்கே என்றாள் லாவண்யா.

சரி விடு .நீ கண்டிப்பா போனும் னு இல்ல.லாயர் யாராச்சும் அரேஞ்ச் பண்ணி தரவா என்றான் வருண்.

இல்ல வருண்.இங்க கோமதி அம்மாவுக்கு தெரிஞ்ச லாயர் இருக்காங்க.ஏற்கனவே இந்த கேஸ் டீல் பண்ணவங்க என்றாள் லாவண்யா.

ஓ சரி மா . டேக் கேர் என்று போனை வைத்தான் வருண்.நீ ரொம்ப பாவம் லாவண்யா .உனக்கு தான் வாழ்க்கையில எவ்ளோ கஷ்டம் என மனதிற்குள் நினைத்து கொண்டான்.

லாவண்யா கேஸ்க்கு தேவயானவற்றை ரெடி பண்ணி விட்டு லாயரிடம் பேசினாள்.லாயர் இவர்களுக்கு சாதகமாக பதில் அளிக்க நிம்மதி அடைந்தாள்.

கேஸ் கோர்ட்டுக்கு வரும் நாள் அன்று.லாவண்யா அனைத்தையும் காலையிலே தயார் செய்து விட்டதால் அமைதியாக கண்ணை மூடி அமர்ந்து இருந்தாள். இந்த கேஸ் இன்னக்கி கண்டிப்பா முடியாது என ஒரு எண்ணம் அவளுள் தோன்றியபடி இருந்தது.

Exam நல்லபடியாக எழுதி முடித்தவுடன் லாயருக்கு போன் செய்தாள். அவள் நினைத்தபடியே கோர்ட்டில் நாள் தள்ளி வைத்து இருந்தனர்.

நீ கவல படாத மா . ஜட்ஜ் ரொம்ப நியாயமானவர்.காசு விஷயத்துக்குலாம் மயங்க மாட்டார்.ஆனா ஒரு விஷயம் தான் எனக்கு புரியல நம்ம opposite side லாயர் அவரோட junior அ தான் அனுப்பி இருந்தாரு. It seems to be இந்த கேஸ் postpone ஆகும்னு அவங்களுக்கு ஏற்கனவே தெரிந்த மாதிரி இருக்கு.அதே போல அந்த எம்எல்ஏ சைட் அவரோட PA மட்டும் வந்து இருந்தாங்க.சரி மா நீ இதெல்லாம் குழப்பாத ஒன்னும் பிரச்சினை இல்ல என்றார் லாயர்.

லாவண்யா என்ன தான் நடக்கும் பாப்போம் என ஒரு மனநிலைக்கு வந்தாள்.

3 நாட்கள் பிறகு கோர்ட் செல்லும் தினமும் வந்தது. லாவண்யாவிற்கு போன முறை கோமதி அம்மாவுடன் அங்கு வந்த நியாபகம் இருந்தது.

1மணி நேரம் வெயிட் பண்ணினர்.அதன் பின் லாவண்யா லாயருடன் உள்ளே சென்றாள்.

ஜட்ஜிற்கு வணக்கம் சொல்லும் போது தான் அந்த ஜட்ஜ் முகத்தை பார்த்தாள்.அப்படியே உறைந்து போனாள்.

உயிரின் உயிராய்Where stories live. Discover now