21/05/2003
மாலை மலர்431மதிப்பெண் எடுத்து கன்னியாகுமரி மாணவன் சாதனை.
(நம்ம சிவாதான்)
அனைவரும் சிவாவை ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டு இருந்தனர். பத்திரிக்கை பேட்டி அளித்து விட்டு வந்தவனுக்கு அவன். தாய் திருஷ்டி சுத்தி போட்டார். லாவண்யா அனைவரையும் விட அதிக அளவு மகிழ்ச்சியாக இருந்தாள்.
அப்போது சிவாவின் அம்மா அவனை புகழ் பெற்ற வேறு பள்ளியில் சேர்ப்பது பற்றிய பேச்சை ஆரம்பித்தார். லாவண்யாவிற்கு மிக கவலையாக இருந்தது. சிவா அதே பள்ளியில் படிப்பதாக கூறினான். ஆனால் அவன் பேச்சை யாரும் கேட்கவில்லை.
அடுத்த நாள் காலையில் அந்த பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். லாவண்யா அதை அவள் வீட்டில் இருந்த படி பார்த்தாள். சிவா இல்லாமல் போர் அடிக்கும் என நினைத்தாள்.
பள்ளியில் அவனை சேர்ப்பது உறுதி ஆயிற்று. விடுமுறை நாட்களில் எப்போதும் லாவண்யா ,கனியுடன் விளையான்டு கொண்டே இருப்பவன் இரண்டு நாட்களாக வரவில்லை என்பதால் அவனை தேடி சென்றனர் லாவணயாவும் கனியும். அவன் தனக்கு தேவயானவற்றை அடுக்கி கொண்டு இருந்தான்.
லாவண்யா அவனை விளையாட அழைக்க அவன் இனிமே என் தொல்லை இல்லாமல் ஜாலியா இருப்பல்ல என்றான். அவளுக்கு அழுகையாக வந்தது. சமாளித்து கொண்டு ஆமா இனிமே என் birthday அன்னிக்கு யாரும் என்ன தொல்லை பண்ண மாட்டாங்க என்று கூறும் போதே அழ ஆரம்பித்தாள்.அவள் அழுவதை பார்த்து கனி அவனுடன் சண்டை போட துவங்கினாள். ஏய் பன்னி அவளே இரண்டு நாளா புலம்பிட்டு இருக்கா நீ வேற லூசு மாதிரி பண்ர.
அவள் அழுது கொண்டே போவதை பார்க்கும் போது இவனுக்கும் கவலையாக இருந்தது. இரண்டு நாளா அவ பேசவில்லை என்பதாலே வந்தவுடன் அவ்வாறு கேட்டான்.
லாவண்யாவின் birthday அப்ப இவன் தான் முதலில் வாழ்த்து தெரிவிப்பான் அதுவும் மயில் தோகையால். லாவண்யாவிற்கு கண்ணன் என்றால் கொள்ள ஆசை. அதனால் இவன் மயில் தோகையை பரிசாக கொடுப்பான். அதுவும் சும்மா குடுக்காமல் தூங்கி கொண்டு இருப்பவளை மயில் தோகையால் எழுப்பி அதை கொடுப்பான்.
லாவண்யாவின் வீட்டிற்கு வந்தவன் அவள் மயில் தோகையோடு யோசித்த படி அமர்ந்திருப்பதை கண்டான். ஹாய் செல்லம்! என்ன பண்ர என்று கேட்கும் போதே அவள் அவனை அடிக்க ஆரம்பித்தாள். இங்க பாருடா தடிமாடு லீவு விட்டா உடனே வீட்டுக்கு ஓடி வரனும் மாசத்துக்கு கரெக்டா 6 தடவ இங்க இருக்கனும். Birthday க்கு எப்பவும் போல விஷ் பண்ணனும். உங்க அம்மா கிட்ட பேசும் போது என்கிட்டயும் பேசனும் என அடுக்கி கொண்டே போனாள். அதற்கு அவன் இப்பவே இப்படினா அப்ப என்று ஏதோ கூற வரும் போது அங்கு வந்த லாவண்யாவின் அம்மா அவனுக்கு சாப்பிட சிற்றுண்டி அளித்தார். பின் அவனிடம் பள்ளி எப்படி என பார்த்து சொல்லு இவளையும் 10 th முடித்தவுடன் அங்கேயே சேர்த்துரலாம் என்றார். அதை கேட்டு லாவண்யாவின் முகம் மகிழ்ச்சியில் வாடின பூவை தண்ணியில் போட்டால் மலர்வதை போல இருந்தது.
(Because அவ ரொம்பப feel பண்ணால அதான் மூஞ்சி இன்னும் சரியாகல. நீங்களும் ரொம்ப feel பண்ணாதீங்க)
சிவா பள்ளிக்கு கிளம்பும் நாளும் வந்தது .