ரவி அவர்களிடம் வந்தான்.சிவாவை நோக்கி ஏண்டா இப்படி பண்ண என கத்தினான்.
லாவண்யா அப்போது தான் சுயநினைவிற்கு வந்தாள்.உடனே இப்ப எதுக்கு என்ன அடிச்ச என சீறினாள்.
லூசா நீ கொஞ்சமாது அறிவு இருக்கா உனக்கு பெரிய mother Theresa னு நினைப்பு.உன் safety க்கு உன்க்கிட்ட என்னடி இருக்கு என்றான் சிவா.
அப்படி என்ன பெரிய safety அப்பா வோட pension amount எனக்கு போதும் என்றாள்.
அவளிடம் இப்படி எல்லாம் பேசினாள் சரி வராது என உணர்ந்தவன்.உன் கண்ணாடி change பண்ணி எத்தன வருஷம் இருக்கும் என்றான்.லாவண்யா இப்ப எதுக்கு பேச்ச மாத்துற என்றாள்.பதில சொல்லு என்றான் சிவா.
என்ன ஒரு 2years இருக்கும் என்றாள்.
Frame மட்டுமே rate எவ்வளவு என்றான்.
850 என்றாள். ஏன் இன்னும் specs changeபண்ணல என கேட்டான் சிவா.
அவள் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.
எனக்கு தெரியும் ஏன் நீ specs மாத்தல னு சரி அதெல்லாம் கூட பெரிய விஷயம் இல்ல என்று சொல்லி கொண்டு அவள் கையை எடுத்து அவன் தலையில் வைத்தவன் promise ஆ சொல்லு உன்னோட basic needs க்கு அந்த pension amount போதுமா என்றான்