லாவண்யாவை இரு நாட்கள் கழித்தே அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவள் கண்ட காட்சி நெஞ்சை உலுக்கியது. எப்போதும் அழகிய பூஞ்சோலையாக இருந்த அவர்கள் ஊர் ஏதோ குப்பைமேட்டைப் போல காட்சி அழித்தது. மரங்கள் எல்லாம் சாய்ந்து கிடந்தது. எல்லா இடங்களிலும் ஒரு ஓஓஓஓ என ஓசை கேட்பது போல உணர்ந்தாள்.
அவள் முதலில் பார்த்த காட்சியே அவள் பாதி உயிரை எடுத்து விட்டது.அது அவர்கள் தெரு நாய்.(தெரு நாய்தானே என்று நினைக்க வேண்டாம் அது லாவண்யாவிற்கு அண்ணன் போல. புரியல அவள follow பண்ற பசங்க கிண்டல் பண்ற பசங்களலாம் துரத்துவது இது வேலை)
முன்பு ஒருமுறை அவள் ஊருக்கு போன போது அந்த நாய் சாப்பிடாமல் பட்டினி கிடந்து பின் அவள் வந்த பிறகே சாப்பிட்டது.லாவண்யாவால் அதற்கு மேல் எதையும் பார்க்க முடியவில்லை. வீட்டிற்குள் நுழைந்ததும் எதையும் பார்க்க கூடாது என முடிவு செய்தாள்.
எனினும் பல காட்சிகள் கண்ணுக்கு தட்டுபட்டது.சிவாவின் வீட்டிலும் இதே நிலமை. என்ன அவன் கண்ணீர் விட்டு அழுதுவிட்டான், இவள் அழவில்லை.
லாவண்யாவிற்கு அந்த நேரத்தில் சிவாவின் மீது கோபம் வந்தது. இவன் மட்டும் விடுமுறை என்று வந்து இருந்தாள் இன்று நானும் இவர்களுடன் இருப்பேனே என்று எண்ணி அவனை மனதிற்குள் திட்டி தீர்த்தாள்.எல்லா சடங்குகளும் முடிந்து வீட்டில் பேய் அறைந்ததை போல இருந்தாள் லாவண்யா.அப்போது ஊட்டி சுற்றுலா குடும்பத்துடன் சென்று வந்த கனி லாவண்யா என கத்தி கொண்டே வந்து அவளை அணைத்து கொண்டாள்.
விருட்டென அவளை தள்ளி விட்டவள் என்னை தொடாதெ என்றாள்.ஏன் என கனி வினவ இனி எனக்கு கிடைக்காதவற்றுள் இதுவும் ஒன்று என்றாள். கனி கண்கழங்கினாள்.அடுத்து என்ன பண்ண போற -கனி
தெரியல- லாவண்யா
இங்கயே இருந்திரேன் -கனி
வேனாம்-லாவண்யாஎங்க போனாலும் என்ன மறந்துறாதே- கனி
ம்ம்ம் -லாவண்யாலாவண்யாவை அவள் அத்தை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். பின் மூன்று மாதங்களில் அவள் தாத்தா வீட்டிற்கு அனுப்பப் பட்டாள்.
சிவாவின் பள்ளியில் இருந்து வந்த அவன் பள்ளி முதல்வர் அவனை தேற்றி பள்ளி கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம் என்றும் நல்ல மதிப்பெண் பெற்றாள் தானே படிக்க வைப்பதாகவும் கூறி அழைத்து சென்றார்.
சிவா இன்னும் வெறி கொண்டு நன்றாக படித்தான்.அவ்வப்போது லாவண்யாவை பற்றி தோன்றும் போது எப்படியும் அவள் அவளது உறவினர்களுடன் சந்தோஷமாக இருப்பாள் என நினைத்தான்.
சிவாவின் பெற்றோர் காதல் திருமணம் செய்த்தால் இரு குடும்பத்தினரும் பேசுவது கூட கிடையாது.