உயிர்-30

3.1K 146 118
                                    

சிவாவிற்கு தூக்கமே வரவில்லை.பழைய போட்டோ ஆல்பத்தை எடுத்து பார்க்க ஆரம்பித்தான்.அம்மா,அப்பா போட்டோ சிவாவின் சின்ன வயது போட்டோ என பார்த்து கொண்டு வந்தவன் கண்ணில் மீண்டும் லாவண்யா போட்டோ தென்பட்டது.அடுத்து உள்ள எல்லா போட்டோவிலும் அவளே இருந்தாள்.

கை ல ஒரு அழகான பொம்மை வைத்து கொண்டு சிவாவை முறைத்து கொண்டு இருந்தாள்.இந்த பொம்மைக்கு லாவண்யா வைத்த பெயர் - லில்லி.சிவாவிற்கு அது - வில்லி.

என் குட்டி பிசாசு எல்லா போட்டோ லயும் என்ன முறைச்சுட்டே இருக்க என சிவா அவளிடம் பேசி கொண்டு இருந்தான்.அடுத்த போட்டோவில் லாவண்யா மாம்பழம் சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.சரியான மாம்பழ பைத்தியம் என நினைத்தவன் திடீரென ஏதோ தோன்ற தூங்கி கொண்டு இருந்த ரவியை எழுப்பினான்.

ரவி தூக்கத்திலேயே ,நீ பயப்படாத மா
லாவண்யா நா இருக்கேன்.உன்ன நா இப்படியே விட மாட்டேன்.இந்த அண்ணன மன்னிச்சிரு என புலம்பினான்.

அட பன்னி பயலே ஏய் லூசு ரவி எந்திரி என அவனை நன்றாக உலுப்பினான் சிவா.

டைம் என்னடா என்றான் ரவி.

மணி நாலரை டா.சீக்கிரம் வா முக்கியமான விஷயம் சொல்ரேன் என்றான் சிவா.

தூங்குனது 12 மணிக்கு எந்திரிக்கிறது 4 மணிக்கா ஓடி போ சாத்தானே என தூங்க ஆரம்பித்தான்.

தப்பு டா மணி நாலரை என்றான் சிவா.

இப்ப ரொம்ப அவசியம் என்றான் ரவி.

சரி பாவம் தூங்கட்டும் என்று நினைத்த சிவா ஊருக்கு போக டிரஸ் பேக் செய்து கொண்டு இருந்தான் அவனுக்கும் ரவிக்கும்.

ரவியால் அடுத்த அரைமணி நேரத்திற்கு மேல் தூங்க முடியவில்லை. அவன் எழுந்து வந்து பார்க்கையில் சிவா 6 juice பாட்டில் ,பிஸ்கட்,சிப்ஸ் என அடுக்கி கொண்டு இருந்தான்.

சிவா,உனக்கு இருந்தாலும் என் மேல ரொம்ப பாசம் டா .travel பண்றப்ப பசிக்கும் நா பசி தாங்க மாட்டேன் எனக்காக இத லாம் செய்யறல்ல லவ் யூ டா .இரு டிரஸ் பேக் பண்ணிட்டு வரேன் என்றான் ரவி.

அதையும் நானே பண்ணிட்டேன் டார்லிங் என்றான் சிவா.

என் சிவா னா சிவா தான்.செல்லக்குட்டி.சரி அவ எந்த ஊர்ல இருப்பா  னு  தெரிஞ்சிரிச்சா என்று கேட்டான் ரவி.

இங்க பாரு நா சொல்வேன் ஆனா என்ன ரொம்ப புகழ  கூடாது டீல் OK வா என்றான் சிவா.

சரி சரி விஷயத்த சொல்லு என்றான் ரவி.

லாவண்யாவுக்கு மாம்பழம் னா ரொம்ப பிடிக்கும் என்றான் சிவா.

சரி இப்ப மாம்பழ சீசன் தான். அவள  கண்டுபிடிச்ச உடனே வாங்கி தரலாம் என்றான் ரவி.

இல்லடா மாம்பழம் என்று இழுத்தான்  சிவா.

இல்லடா மாம்பழம் என்று இழுத்தான்  சிவா

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அட மாம்பழம் எங்கயும் போகாது.நீ லாவண்யா எங்க இருக்க னு சொல்லு என்றான் ரவி.

அது ஒன்னுமில்ல டா .அவளுக்கு மாம்பழம் ரொம்ப பிடிக்கும். அது சேலத்துல தான பேமஸ்.அதனால  அவ அங்க தான் போய் இருப்பா  னு நினைக்கிறேன் என்றான் சிவா.

ரவி ஏதோ மாதிரி பார்க்க புரியுது இவன் நம்ம கூட தான இருந்தான் ஆனா எப்படி இவ்வளவு அறிவா  இருக்கானு தான பாக்குற என்றான் சிவா.

த்தூ டேய் நீ லூசா என்ன.உனக்கு ரொம்ப பசிக்குதா காலையிலயே இப்படி உளற என்னாச்சு உனக்கு என்றான் ரவி.

OK OK be serious. எங்க சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம்.அத சுத்தி உள்ள area ல லாவண்யாவோட ரிலேட்டிவ்ஸ் நிறைய பேர் இருக்குறாங்க அதனால  அவ அந்த பக்கம் போக மாட்டா.இங்க நம்ம nearest ல இருக்குற ஊர்லயும் இருக்க மாட்டா.ரொம்ப கிராமத்துக்கு போக சான்ஸ் இல்ல .அதே போல கடல் இருக்குற கடலூர்,நாகபட்டினம் அந்த மாதிரி இடத்தக்கும் போக மாட்டா.சின்ன வயசுல மாம்பழம் வாங்கி தரலனா சேலத்துக்கு ஓடி போவேன் பயமுறத்தி இருக்கா so அவ சேலத்துல தான் இருக்கனும் என்று
கூறினான் சிவா.

இதுக்கு  முதல சொன்னதே பரவால்ல என நினைத்தவன் எத சொன்னாலும் இந்த மாதிரி அழகா explain பண்றதுல உங்க ஊர்காரங்கல அடிச்சுக்கவே முடியாது .பத்தே நிமிஷத்துல வரேன் என்று ரெடியாக சென்றான் ரவி.

உயிரின் உயிராய்Where stories live. Discover now