நடிக்காத கனி என்கிட்ட எல்லாத்தயும் சொல்லிட்டா என்றாள் லாவண்யா.
என்ன சொன்னா புரியல என்றான் சிவா.
நீங்க ரெண்டு பேரும் friendsமட்டும் தான் னு சொன்னா
இல்லடி எனக்கு அவள ரொம்ப
உளறாத டா பக்கி நீ வேற பொண்ண லவ் பண்றனும் சொன்னா.
அந்த பொண்ண பத்தி உனக்கு தெரியுமா என்றான் சிவா.
தெறியுமே உனக்கு அந்த பொண்ணு மேல ஏதோ கோவம் இப்ப கொஞ்ச நாளா பேசறது இல்ல னு சொன்னா.ஒரு secret சொல்லவா
சொல்லித்தொல என்றான் சிவா.
அந்த பொண்ணு இந்த கல்யாணத்துக்கு வந்து இருக்காளாம் கனி சொன்னா.
சரியா போச்சு என மனதிற்குள் நினைத்து கொண்டான்.
சரி சீக்கிரம் வா அழகான பொண்ணு லாம் அந்த பக்கம் போனாங்க .நாம போய் உன் செல்லக்குட்டி ய தேடுவோம் என்றாள்.
நா வரல நீ போ என்றான்.
எனக்கு தெரியும் நீ இப்படி தான் சொல்வ ஆனா அவள பாத்தவுடன cool ஆயிட்டு பழய மாதிரி பேசுவ வா போலாம் என அவனை இழுத்து கொண்டு சென்றாள்.
இவர்கள் இருவரையும் பார்த்த ரவி என்ன பண்றீங்க என்று கேட்டான்.
அது ஒன்னும் இல்ல அண்ணா சிவா லவ் பண்ற பொண்ண சைட் அடிக்க ஆசை பட்டான் அதான் இங்க கூட்டிட்டு வந்தேன் என்றாள்.
ரவி என்னது இது அவள சைட் அடிக்க volunteer ஆ கூட்டிடு வந்துருக்கா என நினைக்க என்ன காப்பாத்து டா என்றான் சிவா.
நண்பனின் துன்பத்தை உணர்ந்து கொண்டவன் லாவண்யா உன்ன லேனா கூப்பிட்டா ஏதோ சடங்கு இருக்கு என அவளை அனுப்பி வைத்தான்.
சிவாவிடம் இன்னும் எவ்ளோ நாள் தான் இப்படியே விளையாட போற என்றான் ரவி.
அவ ஒரு பையன லவ் பண்றா லூசு மாதிரி behave பண்ணாத என ரவியை திட்டி விட்டு போனான்.
அடுத்த சில நாட்களில் வேலை காரணமாக வெளியூர் சென்று விட்டான்,சிவா.
இராஜசேகரின் இல்லம்
எனக்கு சிரிப்பு தான் டா வருது சின்ன பொண்ணு அவ்ளோ பெரிய building அவ்ளோ ஆளுங்க அவ head ஆ என இராஐசேகர் தன் மஞ்சள் பல்லை காட்டி கொண்டு சிரித்தான்.
ஆமா னா அப்படி போய் விளையாடு பாப்பா னு சொன்னா போ போறா என அவனது வலது கை பேசியது.
அங்கு வந்த இராஜசேகரின் மகன் வருண் அப்பா அவள சாதாரண மா நினைக்காதிங்க என்றான்.
போடா என்ன பண்ண போறா என்றான் இராஜசேகர்.
அவ ரொம்ப தைரியமான பொண்ணு கைல கத்தி pepper spray னு சுத்துவா முக்கியமாக வாய் ரொம்ப நீளம் என்றான் வருண்.
அட போடா நம்ம குமாரு கூட தான் அரிவா சுத்தி னு சுத்துறான் அதோட நாம பொண்ண தூக்கல அந்த இடம் தான் நமக்கு வேணும்.
அவ எனக்கு வேணும் பா என்றான் வருண்.
அவளுக்கு தான் யாரும் கிடையாது கேஸ் முடிஞ்ச பிறகு நடு ரோட்ல நிப்பா அப்ப நீ பாத்துக்க என்றான் இராஜசேகர்.
சரிப்பா என்றான் வருண்.(வருண் யாருனு நியாபகம் இருக்குல 😉😉😉)