உயிர்-24

3.1K 148 135
                                    

ஏய் என்ன பண்ற எல்லாரும் பாக்கராங்க என ரவி அவளை சமாதானப் படுத்தினான்.

முதல உட்காரு.மெதுவா பேசிக்கலாம் என்றான் ரவி.

சிறிது நேரம் அமைதி நீடித்தது.யாரும் எதுவும் பேசவில்லை. ரவி தன்னால் தான் இவ்வளவு பிரச்சினை என குற்ற உணர்ச்சுயில் இருந்தான்.சிவா எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தான்.லாவண்யா மட்டும் எரிமலையை வாடகைக்கு வாங்கி வைத்ததை போல் இருந்தாள்.

சிவாவே பேச ஆரம்பித்தான்.இங்க பாரு நா எந்த தப்பான நோக்கத்தோடவும் என்னும் போதே பாதியில் இடைமறித்த லாவண்யா இப்ப என்ன பண்ணலாம் னு மட்டும் சொல்லு என்றாள்.

நீ டென்ஷன் ஆகாத நா வேலை விஷயமா வேற ஸ்டேட் போறேன்.நேத்து நீ சொன்ன மாதிரி மீட் பண்ணவே வேண்டாம். Suppose உனக்கு என்ன மீட் பண்ணனும் னா இந்த நம்பருக்கு கால் பண்ணு என ஒரு நம்பரையும் குடுத்தான்.

That's good என்றாள் லாவண்யா.

உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.என்கிட்ட ஏன்டா சொல்ல ல .அந்த வருண் கெட்டவன் னு தெரிஞ்சும் அவன் கிட்ட என் தங்கச்சிய விட்டுட்டு போற. இப்ப அதெல்லாம் என் பிரச்சினை இல்ல நீ எங்கயும் போக கூடாது என்றான் ரவி முடிவாக.

சாரி ரவி.நா கண்டிப்பா போய் தான் ஆகனும்.வருண் கெட்டவன் னு சொல்றியே அவன பத்தி எல்லா உண்மையும் தெரியும் னு அவ சொல்றா.இதுக்கு மேல நா என்ன பண்ண என்றான் சிவா.

ஆமா எனக்கு எல்லாமே தெரியும் அவன் எம்எல்ஏ பையன்,அவன் அப்பா எனக்கு future ல பெரிய ஆப்பு வைக்க போறாரு எல்லாம் எனக்கு தெரியும் இப்ப என்ன என சீறினாள் லாவண்யா.

ஓ அவ்ளோ விஷயமும் தெரியுமா.நீ அந்த எம்எல்ஏ இராஜசேகர் கிட்ட காசு வாங்கிட்டியா.இல்ல பணக்கார வீட்ல இருக்க போறோம் ற ஆசை ல அவன் கூட பழகிட்டு இருக்கியா.உன்ன நா என்னவோ நினைச்சேன் ஆனா நீ கேவலம் காசு.....என அந்த வாக்கியத்தை முடிக்கும் முன்னர் சிவா ரவியின் கன்னத்தில் அடித்து இருந்தான்.

லாவண்யாவிற்கு அவன் பேசிய வார்த்தைகள் மனதை ஏதோ செய்து கொண்டு இருந்தது.

ரவி சிவாவை நோக்கி திரும்பி எனக்கு ஒரு help பண்ணு டா என்றான்.

சிவாவிற்கு ஒரு மாதிரி இருந்தது. சொல்லு டா என்றான்.

லாவண்யா கிட்ட ஒன்னு சொன்னல்ல அத எனக்கும் பண்ணிரு .இனி நாம மீட் பண்ண வேண்டாம் என்று வேகமாக கிளம்பி சென்று விட்டான்.

சிவாவிற்கு லாவண்யாவை எப்படி சமாதானப் படுத்துவது என்றே தெரியவில்லை.

தயவு செஞ்சு எதுவும் பேசாத சிவா.போதும் எல்லாம் போதும். உன்னால தான் நா என் குடும்பத்தை இழந்தேன்.இந்த ஊர்ல வந்து கிடைத்த ஒரு நல்ல அண்ணனையும் இழந்துட்டேன்.உன்னால தான் இப்ப எனக்கு இந்த பேரு காசு பணத்துக்கு ஆசை படுறவ னு.என் வாழ்க்கை மொத்தமாவும் நீயே விளையாடு என அவளும் வேகமாக சென்று விட்டாள்.

சிவா மட்டும் மனதிற்குள் அழுது கொண்டு இருந்தான்.எனக்கு பேச கூட விட மாட்டிங்களா என நினைத்தான்.

லாவண்யாவிடம் அவன் இதை எதிர்பார்த்தது தான் என்றாலும் அவள் பேசிய வார்த்தைகள் ஏனோ மனதை குத்தியது.ரவியிடம் இப்படி ஒரு மாற்றத்தை சிவா எதிர்பார்க்கவில்லை. அடுத்து வந்த இருநாட்களும் சிவாவை பார்த்தாலும் பார்க்காதது போல சென்று விடுவான்.

சிவாவிற்கு ரவி friend மட்டும் இல்லை அப்பா,அண்ணன்,தம்பி எல்லாம் அவன்தான்.அவன் இப்படி இருப்பதை சிவாவால் தாங்கிக்க முடியவில்லை.

சிவா ஊருக்கு புறப்படும் நாள் வந்தது. ரவியும் சிவாவிடம் பேச வேண்டும் என நினைத்தான்.ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது.சிவா போய்ட்டு வரேன் டா என்னும் போது கண் கலங்கி விட்டது ரவிக்கு.சிவாவும் அதை கவனித்தான்.

ஒருவாரம் கழித்து சிவா செல்லிற்கு message வந்தது. எப்படி இருக்க என்று. ரவி தான் அதை அனுப்பி இருப்பான் என தெரிந்து சிவா reply பண்ணவில்லை.

ஒரு மணி நேரம் கழித்து அதே நம்பரில் இருந்து கால் வந்தது.

அங்க சிவா னு ஒரு லூசு இருக்கும் அது கிட்ட பேசனும் என்றான் ரவி.

ஓ பேபி கால் பண்ணிட்டியா.உம்மா உம்மா என அவனை கொஞ்ச ஆரம்பித்தான்.

இருவரும் பழைய படி மாறினர்.

லாவண்யா கோர்ட் ல் இருந்து வந்த தபாலை வைத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தான். முன்னரே அறிந்தது என்றாலும் பல வித குழப்பத்தில் இருந்தாள்.

உயிரின் உயிராய்Where stories live. Discover now