சரி போறோம் ஆனா போறதுக்கு ஆட்டோக்கு ஒரு அமௌன்ட் குடு போறோம் என்றான் சிவா.
ரவி தனக்கும் அங்கு நடக்கும் எதற்கும் சம்பதமில்லாத்து போல இருந்தான்.
லாவண்யா தன் பெரிய கண்களை இன்னும் பெரிதாக்கி சிவாவை ரசித்து(முறைத்து) கொண்டு இருந்தாள்.
என்ன முழிக்கிற இப்டி முழிச்சா விட்டுறுவோம்னு நினைச்சியா.ஹாஸ்பிடல் பில்லும் settle பண்ணிரு.ஒழுங்கா சாப்பிடறது இல்ல .சும்மா சும்மா மயங்கி விழுந்துட்டு கிட்டு .நீ என்ன தான் படிச்ச 3 வருஷம் என்றான் சிவா.
ஹலோ மிஸ்டர் என் உடம்ப பாத்துக்க எனக்கு தெரியும். நீங்க ஒன்னும் சொல்ல தேவையில்லை .இப்ப என்கிட்ட காசு எதுவும் இல்ல என்றாள் கூலாக.
காசு இல்லயா .இப்ப ஹாஷ்பிடல் பில்லு,ஆட்டோக்கு லாம் காசுக்கு என்ன பண்ண என்றான் சிவா.
உன்ன யாரு என்ன தூக்கிட்டு வர சொன்னா.அப்படியே விட்டு இருந்தா ஒரு 10 நிமிஷத்துல எந்திரிச்சி இருப்பேன் என்றாள் லாவண்யா.
சரி சரி அடுத்த தடவ அப்படியே தூங்குனு விட்டுறேன்.ஒரு முக்கியமான விஷயம் நா ஒன்னும் உன்ன தூக்கிட்டு லாம் வரல தூக்குற மாதிரி யா இருக்க அப்பபா என்றான் சிவா.
ரவி இதற்கு மட்டும் சிவா கூட சேர்ந்து சிரிக்க நவ் இட்ஸ் ரவி டர்ன் .
ஏன்டா பக்கி சிரிக்கிற . வெக்கமா இல்ல .நீ லாம் ஒரு அண்ணன் னா எனக்கு என்னாச்சு னு கூட வந்து பாக்கல.எதுக்கு இருக்க லூசு லூசு என திட்டினாள் லாவண்யா.
இதுவரை யார் போல் நின்று கொண்டு இருந்தவன் .அவள் பேசியதை கேட்டு கண்கலங்க சாரி டா என்றான்.
என்ன நடந்துச்சு னு எல்லா விஷயமும் தெரியும். நீ ஹாஷ்பிடல்ல இருக்கும் போது ஒருதடவை வந்தேன் டா.பட் உன்ன பாத்து பேசுற தைரியம் அப்ப இல்ல என்றான் ரவி.
லாவண்யாவின் முகம் சோகமாக மாறிக் கொண்டே வருவதை பார்த்த சிவா ,ஆமா நீ ஏன் இங்க வந்த என்ன பிரச்சினை என்று கேட்டான்.