பிஸ்கெட் சாப்பிட்டு கொண்டு இருந்த லாவண்யாவின் கவனத்தை பக்கத்து சீட்டில் இருந்த அப்பாவும் பெண்ணும் ஈர்த்தனர்.
டோரா போல் முடி வெட்டி இருந்த அந்த சிறுமி தன் குட்டி கைகளால் அவள் அப்பாவின் தலையை கோதி விட்டபடி இருந்தாள்.கொஞ்ச நேரம் கழித்து அந்த சிறுமி அவள் அப்பாவின் தோளில் சாய்ந்தபடியே தூங்கியும் போனாள்.
லாவண்யாவிற்கு அதற்கு மேல் சாப்பிட பிடிக்கவில்லை.அவளது அப்பாவின் நியாபகம் வந்து அவளை வாட்டியது.
ஒருமுறை லாவண்யா பரதநாட்டிய வகுப்பு சென்று வரும்போது நன்கு இருட்டி இருந்தது. அவளை அழைத்து செல்ல அவளது அப்பா பைக்கில் காத்து கொண்டு இருந்தார்.
அப்பா ரொம்ப டையர்டா ஆ இருக்குப்பா.சீக்கிரமா வீட்டுக்கு போலாம் என்றாள் லாவண்யா.
சரி மா என்றபடி வண்டியை ஓட்டியவர் திடீரென ஒருநிமிடம் வண்டியை நிறுத்தி ஏதோ செய்தார்.அவர் முதுகில் சாய்ந்தபடி வந்த லாவண்யா என்னாச்சு பா என்றாள் .
ஒன்னுமில்ல மா என்றபடி வீட்டில் லாவண்யாவை வீட்டில் விட்டவர் உடனே மருத்துவமனைக்கு விரைந்தார்.
லாவண்யாவிற்காக அவர் காத்திருக்கும் போது வண்டியின் டையரோடு சுத்தி இருந்த பாம்பு அவர் காலை பதம் பார்த்து இருந்தது.
இந்த நிகழ்வு இப்போது லாவண்யாவிற்கு நினைவு வர அவள் கண்ணில் இருந்து அருவி கொட்டி இருந்தது.
மஞ்சு பாட்டி பதறியபடி என்னாச்சு மா என்றார்.
கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாமல் சிவா கிட்ட பேசணும் பாட்டி என்றாள். சொல்லி முடித்த பிறகு தான் எதற்கு அப்படி கூறினோம் என குழம்பினாள்.
சிவா நம்பர் பிஸி என வர கொஞ்சம் நேரம் படு மா என தன் மடியில் அவளை படுக்க வைத்து கொண்டார் பாட்டி.
சிவா ரவியிடம் பேசி கொண்டு இருந்தான்.லாவண்யாவை வந்ததும் பிக் அப் பண்றது ல இருந்து அவள பத்திரமா பஸ் ஏத்தி விடற வரைக்கும் அவ கூடவே இரு டா என்றான்.