வழக்கம் போல் வேனில் ஏறியவுடன் தன் தம்பியை சிவா தன் பக்கத்தில் அமர வைத்து கொண்டான்.அதை பார்த்த லாவண்யாவிற்கு கடுப்பாக இருந்தது.தன் தம்பியை அவன் பிரிப்பதாகவே அவள் கருதினாள்.இன்று அவனை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றியது.அனைவரும் வந்த பின் அவள் மெதுவாக ஆரம்பித்தாள்.அவள் தோழி கனியிடம் பேசுவது போல அனைவரும் கேட்கும்படி பேசினாள்.கனி உனக்கு ஒரு செய்தி தெரியுமா டி பக்கத்து வீட்டில் இருந்த ஒரு அழுகை சத்தம் பல நாள்களாக கேட்கிறது என்றாள்.கனியும் அதே தெரு என்பதால் அவள் அவனை தான் கூறுகிறாள் என அறிந்து அமைதியாக இருக்கும் படி கூறி சைகை மொழி செய்தாள்.ஆனால் இவளோ ஒன்றும் தெரியாத மாரி முகத்தை வைத்து கொண்டாள்.சிவா கண்களால் கெஞ்சுவதை கண்டு மனம் மாறி விட கூடாது என திரும்பி அமர்ந்தாள்.வேனில் இருப்பவர்கள் என்ன என வினவ நம் கிரிக்கெட் வீரர் சிவா தினமும் வீட்டில் வாங்குவதை கூறி சிரித்தாள்.அனைவரும் இதை கேட்டு கிரிக்கெட் வீரர் படிப்பில் டக் அவுட் என சிரித்தனர்.வேனில் இருந்த அனைவரும் சிரித்தனர். கனியையும்,சிவாவையும் தவிர்த்து. சிவாவிற்கு அசிங்கமாக இருந்தது. அவன் இவளிடம் ஏன் அனைத்தையும் பகிர்ந்து கொண்டோம் என்று நினைத்து கொண்டு இருந்தான்.கனி லாவண்யாவை வாய மூடு டி என தடுக்கவும் பள்ளி வரவும் சரியாக இருந்தது. எறங்கும் போது சிவாவின் முகத்தைப் பார்த்தவள் தான் செய்த தவறை உணர்ந்தாள்.அவனே அவள் தம்பியையும் வகுப்பில் விட்டு செல்வதை கண்டாள்.சிவா எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல பையன் தான் என்பதை அவள் மனம் உணர்த்தியது. அவனின் துயரங்களை என்னை நம்பிதானே பகிர்ந்தான் நாம் ஏன் அனைவரிடமும் அதை சொன்னோம் என வருந்தினாள்.அனைத்தையும் செய்த விட்டு இவ்வாறு புலம்புவது தவறு என நினைத்து வேகமாக தன் வகுப்பறை செல்ல அங்கு ஒரு கூட்டம் சிவாவின் வீட்டில் நடந்த்தாக இவள் கூறியதை பேசிக் கொண்டு இருந்தது.லாவண்யா தான் செய்தது எவ்வளவு பெரிய மடத்தனம் என அறிந்து வருந்தினாள்.அங்கு சிவாவோ கோபத்தின் உச்சியில் இருந்தான். அவன் உள்ளே வந்தவுடன் அனைவரும் துக்கம் விசாரிப்பது போல் விசாரிக்க அவன் பல்லை கடித்து கொண்டு இருந்தான்.இடைவெளியின் போது லாவண்யாவிடம் அவள் கூறியது உண்மையா என கேட்க பெரும் கூட்டமே திரண்டது.அதிலும் அவன் நண்பர்கள் கூட அறியாதவற்றை இவள் கூற பெரிய அளவு கூட்டம் சேர்ந்தது. இவள் விளையாட்டாக செய்தது பெரிய அளவில் முடித்தது . கனி அனைவரையும் சமாளித்து அனுப்மிய பின் இவளிடம் நீ ஒரு நல்ல தோழியே இல்லை என கத்தி விட்டு சென்றாள். மாலையில் மன்னிப்பு கேட்க என எண்ணி மாலைக்காக காத்திருந்தாள்.