இந்த விளையாட்டை நிறுத்த ஒரு நாள் வந்ததது.லாவண்யாவிற்கு பள்ளியில் கொடுத்த வீட்டுப்பாடம் புரியவில்லை என்று சிவாவின் வீட்டுக்கு சென்றாள்.அங்கு அவன் அம்மாவே புரியும்படி கூறினார்.அவருக்கு நன்றி கூறிவிட்டு வெளியே வரும் போது சிவா வந்தான்.அவளிடம் எதுவும் பேசாமல் உள்ளே சென்றான். இன்று அவனை பேச வைத்தே ஆக வேண்டும் என்ற முடிவுடன் உள்ளே சென்றவள் அத்தை (பக்கத்து வீட்டில் இருப்பவரை நாம் அப்படி தானே கூப்பிடுவோம்)எனக்கு இன்னமும் குழப்பம் தீரவில்லை.சிவாவின் பழைய நோட்டை காட்டும் படி கேட்டாள்.சிவா முடியாது என மறுத்தான். பின் அவன் தாய் வற்புறுத்தவே குடுத்தான்.இரவில் லாவண்யா நோட்டை கொடுக்கும் போது அவன் 420 உனக்கு புரியல இத நான் நம்பி என் நோட்ட கொடுக்கனும் என்று நக்கலாக கேட்டான்.
அவன் பேசியதால் மகிழ்ந்தவள்,அதை காட்டிக்கொள்ளாமல் மறுபடியும் sorry என்று சோகமாக சொன்னாள்.அதை கேட்டதும் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. மூஞ்சிய அப்படி வைக்காத சிரிப்பு வருது என்று கூறி சிரிக்க அவள் கண்களில் கண்ணீர். சிவா உடனே அய்யோ செல்லம் அழாத என கொஞ்ச அவள் நான் விளையாட்டாக செய்தேன் என்று மீண்டும் மன்னிப்பு கேட்டாள். இருவரும் பல வகையான கதைகளை பேசி மகிழ்ந்தனர்.வேனில் அவனை ஏளனம் செய்தவர்களிடம் சண்டை போட்டாள்.இவ்வாறு வாழ்க்கை இனிமையாக சென்றது.