லாவண்யா மெதுவாக எழுந்து சீட்டில் சாய்ந்தபடி அமர்ந்தாள்.சிவா நல்ல தூக்கத்தில் இருந்தான் .சிவாவின் முகத்தை ஒருமுறை உற்று பார்த்தாள்.
சீட்டில் சாய்ந்தபடி கண்ணை இறுக்க மூடிக் கொண்டாள்.என்ன தான் மாடர்ன் என்றாலும் இந்த சமூகம் இதை எப்படி பார்க்கும். நா எப்படி சிவா கூட அந்த வீட்ல தங்க முடியும்.மொழி தெரியாத ஊர் னாலும் கண்டிப்பா எல்லா கண்களும் தப்பா தான் பாக்கும் தப்பா பேசுவாங்க.எப்படியாவது சிவா கிட்ட சொல்லிட்டு 2 வாரத்துல ஏதாவது ஹாஸ்டல் போய்ரனும் என நினைத்தாள்.
கார் மெதுவாக போவதை உணர்ந்து கண்ணை திறந்தாள்.டிராபிக் ஜாம்.
பெங்களூர் ரொம்பவே அழகாக இருந்தது. லாவண்யாவிற்கு சின்ன வயதில் இருந்து பெங்களூர் என்ற பெயர் சொன்னாலே போதும் அவ்ளோ ஹாப்பி.ஆனா ஒரு தடவை கூட பெங்களூர் போனது இல்ல.அவள் பெங்களூரை விழி விரிய பார்த்தாள்.
சிவாவின் போன் அடிக்கவே லாவண்யா போனை அட்டன் செய்யலாம் என நினைத்தாள்.பாவம் என்னால தான அவன் தூக்கம் கேட்டு போச்சு என போனை எடுக்க அவன் ஷர்ட் பாக்கெட்டை துலாவ சிவாவோ
அவளை மறுபடி தோளில் சாய்த்து கொண்டான்.அட பாவி தூங்கும் போது கூட இந்த அவர்னஸ் லா நல்லா தான் இருக்கு என அவன் தோளில் சாய்ந்தபடி போனை அட்டன்ட் செய்தாள்.
மறுமுனையில் பேசியவரோ கன்னடத்தில் ஏதோ கேட்க லாவண்யாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
இவள் பேசுற ஆங்கிலம் அவருக்கு புரியவில்லை. இதற்கு நடுவில் சிவா எழுந்து விட்டான்.
போனை வாங்கி ஏதோ வித்தியாசமான சவுண்ட் எழுப்பினான்.(கன்னடத்தில் பேசுனான் )
போனை வைத்தவுடன் உனக்கு யார் இந்த லாங்குவேஜ் சொல்லி குடுத்தா என்றாள் லாவண்யா.
எனக்கு தான் சின்ன வயசிலயே தெரியுமே.பிரண்ட் சொல்லி குடுத்தான்.இப்ப இங்க வந்து கொஞ்சம் கத்துகிட்டேன்.நீயும் கத்துக்கோ ஈஸி தான் என்றான்.