உயிர்-36

3K 129 98
                                    

லாவண்யா நிமிர்ந்து பார்த்தாள் அங்கு சிவா நின்று கொண்டு இருந்தான்.ஒரு பக்கம் சந்தோஷம்மும் மறுபக்கம் கோவமும் வந்தது.

இங்க நீ என்ன பண்ற என்றாள் கோவத்துடன்.

என்னோட favorite பூனைக்குட்டி ஒன்னு இங்க மாட்டிகிச்சி அதான் இங்க வந்தேன் என்றான்.

லாவண்யா அவனை முறைத்து கொண்டு இருந்தாள்.

காலையிலயே ரவி சொன்னான் உடம்பு சரியில்ல னு அதான் பாத்துட்டு போலாம் னு நினைச்சேன் பட் நடுவுல நிறைய வேலை.இப்ப ஒரு பத்து நிமிஷத்துல கிளம்பனும் என்றான்.

பத்து நிமிஷத்துல நீ கிளம்பறதுக்கு எதுக்கு தான் வரனுமோ என வாய்க்குள் திட்டினாள்.

இப்டி மழைல விளையாடுனா காய்ச்சல் வராம என்ன பண்ணும் .அந்த பக்கம் வா என அழைத்து சென்றான்.

அங்கு உள்ள பெஞ்சில் இருவரும் அமர்ந்தனர்.மழை விட்டு லேசாக தூறி கொண்டு இருந்தது.

ஏய் பேய்க்குட்டி டைம் ஆச்சு டி.எதோ சொல்லனும் னு சொன்னல்ல சொல்றியா என்று கேட்கும் போதே அவன் போன் அடித்தது.அவன் கட் செய்தான்.

எதுக்கு கட் பண்ர பேசு என்றாள் லாவண்யா.

கிளம்பனும் டி சீக்கிரம் என்றான்.

சிவா என்னால  முடியல டா.கொஞ்சம் நேரம் தூங்கனும் என்றாள்.அவன் எதுவும் பேசாமல் அவளை தன் மடியில் சாய்த்து கொண்டான்.

லாவண்யா தூங்கி போனாள்.சிவாவிற்கு மனதிற்குள் ' மறுவார்த்தை பேசாதே ' சாங்க் ஓடி கொண்டு இருந்தது .

பயங்கர குளிர் மெதுவாக கண்ணை திறந்தாள் லாவண்யா.சிவாவின் மடியில் படுத்து இருப்பதை உணர்ந்தாள். சிவா யாருடனோ போனில் பேசியபடி இருந்தான்.லாவண்யா எழுந்து உட்கார்ந்தாள்.

எந்திரிச்சிடியா.feeling better .கிளம்பலாமா என்றான்.

ஏன் சிவா இப்படி இருக்க.என்ன பத்தி யோசிக்கவே மாட்டியா .உன் வேலை தான் உனக்கு முக்கியமா சரி போ என மனதிற்குள் குமுறி கொண்டு இருந்தாள்.

உயிரின் உயிராய்Where stories live. Discover now