உயிர்-49

3.4K 108 73
                                    

சிவா லாவண்யா கடத்தப்பட்டு இருப்பதால் சரியாக சாப்பிடாமல் தூங்காமல் இருப்பான் என்று எண்ணி இருந்தால் அது தான் தவறா செயல். வழக்கத்திற்கு மாறாக நன்றாக சாப்பிட்டு தினமும் 8 மணி நேரம் தூங்கவும் செய்தான். (இவன்லாம் ஒரு ஹீரோ 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️)


ரவியும் லேனாவும் லாவண்யாவை தேட சிவாவை அழைத்தாலும் செல்ல மாட்டான்.லாவண்யாவை பத்தி பேசும் இடத்திலே இருக்க மாட்டான்.பாட்டியும் எவ்வளவோ வற்புறுத்தியும் லாவண்யா என்று ஒருத்தி இருந்த மாதிரியே காட்டி கொள்ள மாட்டான்.

(சிவாக்கு என்னவோ ஆச்சு🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️)

இன்னோறு பக்கம் கனி😤😤😤😤 தன் தோழியின் நிலைக்கு லேனாவே முழு காரணம் என அவளை நேரடியாகவே திட்டி தீர்க்க  அதுவே ரவிக்கும் அவளுக்கும் மனஸ்தாபம் வர போதிய காரணமாயிற்று.

நாட்கள் விரைந்து ஓட தொடங்கியது ஆனாலும் லாவண்யாவை கண்டுபிடித்தபாடில்லை.

இராஜசேகரின் ஆட்கள் அவள் கடத்தப்பட்ட 1 மணிநேரத்திற்கு முன்னதாகவே தப்பி சென்றதாக தெரிவித்தனர்.எல்லா கதவுகளும்  அடைக்கப்பட்தாகவே அனைவரும்  உணர்ந்தனர்.

வீட்டில் கலகலப்பு என்று ஒன்று இல்லாமல் போனது. பேசிக்கொள்வதே அறிதாகியும் போனது.

காலம் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காது.அது தன் போக்கில்  ஓடியது. 2 1/2 வருடம் சென்றது. அதற்குள் கனி வீட்டில்  கல்யாணம் செய்ய வற்புறுத்த இதோ இன்னும் 3 நாட்களில் தேதி குறித்தும் விட்டனர்.

இப்போது அனைவருக்கும் லாவண்யாவின் மேல் கோவம் மட்டுமே. லேனாவிற்கு வடமாநிலத்திற்கு பணிமாறுதல் ஆக அவர் கணத்த இதயத்துடன் விடைப்பெற்றார்.

கனி ரவி இருவர் முகத்திலும் கல்யாண கலை என்பதே இல்லாமல் போயிற்று. இப்போது அனைவருக்கும் சென்னையில்  சிவாவின் இல்லத்தில் தங்கி இருந்தனர்.( சிவாவும் பாட்டியும்)

கல்யாணத்திற்கு ஆடை ஆபரணங்கள் வாங்க அனைவரும் புறப்பட்டனர். ஏதோ சின்ன சந்தோசம் அவர்களை அறியாமல் ஒட்டி கொண்டது.

முதலில் கனிக்கு புடவை தேர்வு செய்ய போக 2 மணிநேரம் அலசி ஆராய்ந்தனர்.ஆனால் யாருக்கும் அவ்வளவு பிடித்தம் ஏற்படவில்லை.
சலித்து போன பணிப்பெண் புது மாடல் மேம் ,இப்போ இது தான் ட்ரெண்டிங் என தீவிரமாக கூற கனியின் கண்களில் இருந்து  கண்ணீர் வழிந்தோட மொத்த கடையும்  அதிர்ந்தது.

காரணம் ரொம்ப பெரிசுலாம் இல்ல பா ஆன கொஞ்சம் பழசு தான்.அது ஒன்னும் இல்ல கனியின் திருமணத்தின் போது இருவரும் ஒரே மாதிரி ஆடை ஆபரணங்கள் போட்டு  மகிழ வேண்டும் என்பது அவர்கள் இருவரின் நீண்ட நாள்  ஆசை .

அந்த  பணிப்பெண்  அக்கா-தங்கை   ஒரே மாதிரி  கட்டலாம் என்று அழகாக விவரிக்க அவ்வளவு தான் கனியின் நிலை. நீண்ட நேரம் பின்னரே கனியின் அழுகை நின்றது.

கனி அந்த இரண்டு ஒரே மாதிரி இருக்கும் புடவையிலே ஒன்றை தேர்வு செய்ய அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. இருப்பினும் யாரும் வெளியில் காட்டி கொள்ளவில்லை.

புடவையை கண்ணாடியில் வைத்து பார்க்க கனிக்கு மனதில் சாரல் காத்து வீச துவங்கியது. மனதை ஒருநிலை படுத்த எண்ணி அவள் கண்ணாடியை பார்க்க  அங்கு குழந்தைகள் பிரிவில் ஒரு குழந்தை தன் அம்மாவின் கண்ணத்தை இழுத்து விளையாடி சிரிக்க கனியின் உள்ளம் கனிந்து போனது.

அந்த குழந்தைக்கு அவளது தாயும் முத்தமிட கனிக்கு மயக்கம் வராத குறைதான். அச்சு அசல் லாவண்யாவின் சாயல். மீண்டும் கனியின் கண்கள் குழமாக அதற்குள் அந்த இடத்தில் அவர்களை காணவில்லை.

கனி சிவாவிடம் ஓடி சென்று லாவண்யா  லாவண்யா என்று திக்கிதிணற அதற்குள் அவள் ஒரு குழந்தைக்கு தாய் என்று முடித்தான்.

அதிர்ச்சியில் வேர்த்து கொட்டியது அவர்கள் அனைவருக்கும். ஆனால் சிவாவோ மெல்லிய புன்னகையுடன் கடையை விட்டு வெளியேறி விட்டான்.அவனை தடுக்க போன ரவியை கட்டிக்கொண்டு  கனி மீண்டும் அழ எதுவும் செய்ய இயலாத நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டனர்.

   

உயிரின் உயிராய்Where stories live. Discover now