4 வருடங்கள் ஓடியது
சிவாவிற்கு campus interview ல் வேலை கிடைத்தது. இந்த நான்கு வருட college life ல் அவனுக்கு கிடைத்த நல்ல நண்பன் ரவி.
ரவி collegeல் இரண்டாம் வருடம் வந்து சேர்ந்தான். அவன் வீடு அருகில் இருந்தும் hostelல் வந்து சேர்ந்தான்
முதல் முறை பார்த்ததில் இருந்தே இருவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். இப்போது இருவருக்கும் ஒரே கம்பெனியில் வேலையும் கிடைத்து இருந்தது.
சிவா வேலை கிடைத்தை கொண்டாடுவதற்கு வெளியே செல்லலாம் என்றான். அதற்கு ரவி தன் வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளி இருக்கும் 'அன்னை இல்லம்' போலாம் என்றான்.
இருவரும் ரவி வீட்டில் காலை உணவு சாப்பிட்டு விட்டு 'அன்னை இல்லம்' கிளம்பினர்.இருவரும் நடந்தே சென்றனர்.
போகும் வழியில் ரவி 'அன்னை இல்லத்தை' பற்றி கூறி கொண்டு வந்தான்.
அன்னை இல்லம் மிகவும் பழமையானது. நல்ல main இடத்தில் இருப்பதால் அதை 2 வருடங்கள் முன் ஒரு கூட்டம் அபகரிக்க நினைத்தது.ஆனால் அங்கு வசிப்பவர்கள் கேஸ் போட்டு அதை தடுத்தனர். அதை நிறுவிய கோமதி அம்மாள் சென்ற வருடம் இறந்தார் என்றும் தற்போது அதை நடத்தி வருபவரை பார்த்தாள் கண்டிப்பாக ஆச்சர்யம் அடைவாய் என்று சொல்லி கொண்டு உள்ளே நுழைந்தனர்.
அன்னை இல்லம் மிகவும் அழகாக இருந்தது. கட்டடம் உறுதியாக காணப்பட்டது.painting மட்டும் பழையதாக காணப்பட்டது. வெளியே கொளுத்தும் வெயிலுக்கு உள்ளே இதமாக இருந்தது. நிறைய மரங்கள் இருந்தது.