அடுத்த நாள் காலை லாவண்யா ரொம்ப ஜாலியாக காலேஜ்க்கு கிளம்பி கொண்டு இருந்தாள்.சிவா ஆபிஸ்க்கு லீவ் சொல்லிவிட்டான்.மஞ்சு பாட்டி சாமி கும்பிட்டு லாவண்யாவுக்கும் சிவாவுக்கு விபூதி பூசி விட்டார்.
சாப்பிட்டு முடித்தவுடன் நான் காலேஜ் பஸ்லயே போறேன் சிவா என்றாள் லாவண்யா.
அப்ப அவன் எதுக்கு டி லீவ் போட்டு உட் கார்ந்து இருக்கேன்.ஒழுங்கா அவன் கூடவே போ என்றார் மஞ்சு பாட்டி.
அதை கேட்டதும் லாவண்யாவின் முகம் சுருங்கி விட்டது.சிவா புன்முறுவலுடன் கவனித்தான்.
நீ காலேஜ் பஸ்லயே போ லாவண்யா என்றான்.
எல்லாம் நீ குடுக்குற செல்லம் தான் டா.அப்புறம் ஏன் இவ ஆட மாட்டா என்றார் பாட்டி.
அப்படி இல்ல பாட்டி .அவ காலேஜ் பஸ் ல ஏன் போனும் னு சொல்றா தெறியுமா அவளுக்கு ஜன்னல் சீட்ட பிடிக்கனும் அதான் என்று சொன்னான் .மஞ்சு பாட்டி அவனோடு சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தார்.
போடா பூரிவாயா.நீயெல்லாம் எனக்கு சப்போர்ட் பண்ணிட்டாலும் என்றபடியே கிளம்பியும் விட்டாள்.
பஸ் வந்ததும் ஏறியவள் அவன் சொன்னது போலவே ஜன்னல் சீட்டில் உட்கார்ந்தபடி அவனுக்கு பை சொன்னாள்.
சிவாவும் சிரித்தபடியே கை அசைத்தான்.இருவரும் தங்கள் பள்ளி காலத்தில் வேனில் போகும் அந்த இனிய நிகழ்வுக்குள் மூழ்கினர்.
காலேஜ்க்குள் பஸ் நின்றவுடன் இறங்கினாள் லாவண்யா.கொஞ்சம் தூரம் நடந்தவள் யாரோ பின்தொடர்வதை போல உணர்ந்தாள்.
வேற யாரு நம்ம சிவா பக்கி தான்.அவனை அங்கு பார்த்த லாவண்யாவிற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை.
சிவா சிரித்தபடி ,வா போலாம் என அழைத்து சென்றான்.
லாவண்யா அவள் கிளாஸ் ரூம்க்கு போகும்வரை காத்திருந்தவன் பின் அங்கிருந்து கிளம்பினான்.
வீட்டிற்கு வந்தவன் டிவி பார்த்து கொண்டு இருந்த மஞ்சு பாட்டியின் மடியில் படுத்து கொண்டான்.