அதிர்ந்தது சிவாவும் ரவியும் மட்டும் அல்ல லாவண்யாவின் மனமும் தான்.
கடவுளே என்ன சோதனை இது.சமாளிக்கிறதுக்கு இப்படி லாம் பொய் சொல்ல வேண்டி இருக்கே என நினைத்தாள்.
சிவாவும் ரவியும் லாவண்யாவை அவர்களோடு சென்னைக்கு வர சொன்னார்கள்.ஆனால் லாவண்யா மறுத்து விட்டாள்.சிவாவிற்கும் ரவிக்கும் லாவண்யா செய்வது அனைத்தும் வருத்தம் தந்தாலும் காட்டிகாமல் இருந்தனர்.
அதிலும் சிவாவிற்கு லாவண்யா மேல் அதிக வருத்தம் .எப்படி இருந்த பொண்ணு இன்னைக்கு இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு லூசு மாதிரி இருக்காளே என்று.அவனால் தான் என்ன செய்ய முடியும் அவள் வாழ்க்கைகாக.
இருவரும் இனி என்ன நடந்தாலும் சொல்லனும் என கூறிவிட்டு சென்னை சென்றனர்.
அன்று இரவு லாவண்யாவிற்கு தூக்கமே வரவில்லை. எத்தனை கனவுகள் எல்லாம் வீணாதே என குமுறி கொண்டு இருந்தாள்.
லாவண்யாவிற்கு கலெக்டர் ஆக வேண்டும் என்பதே லட்சியம்.ஆனால் கோமதி அம்மாவின் விருப்பப்படி டாக்டருக்கு படித்தாள்.அதுவும் இல்லாமல் இப்ப துணி கடைல வேலை பார்க்கிறோம் என நினைக்கும் போது தொண்டை அடைத்தது.
எல்லார் லைப்லயும் ஏற்றம் இறக்கம் இரண்டும் இருக்கும். ஆனா எனக்கு எல்லாமே கீழ மட்டும் தான் போது என வாழ்க்கை வெறுத்து போய் இருந்தாள்
யார் உண்மை யார் பொய் என அறிய தெரியாத பேதை யா நீ என அவளையே அவள் கேள்வி எழுப்பி கொண்டாள்.
இனி என் வாழ்க்கை இப்படி தான் முடிய போகிறது என வருந்தியபடியே தூங்கி போனாள் லாவண்யா.
சிவாவும் லாவண்யாவை நினைத்தபடியே தூங்கிவிட்டான்.
நா அவள அம்மா சத்தியமா பாத்தேன் அண்ணே என்றான் அந்த நாய்சேகரின் வலது கை.
அப்போ எங்கடா போனா .என்ன பைத்தியம் ஆகிட்டு எங்க போனா. அவ எப்ப வந்தாலும் நமக்கு பிரச்சனை தான் டா .சீ ஒரு சின்ன பொண்ண நினைச்சி பயப்படர மாதிரி ஆயிரிச்சே.
அண்ணா நாங்க இருக்கோம் .நாளைக்கு அந்த கடைல சொல்லி தேடுறோம் இல்ல இல்ல அவள தூக்குறோம் என்றான் அந்த வலது கை.
ஆமா கண்ணு முன்னாடி இருந்தவள பிடிக்க வக்கு இல்ல பேசுறான் பாரு.என் பையனுக்கு புத்தி கெட்டு போச்சு இல்லனா அவன வச்சி இவள ஒரு வழி பண்ணி இருப்பேன்.என்ன பண்ணுவ தெரியாது நாளைக்கு அவ வேணும் என்றான் அந்த எம்எல்ஏ இராஜசேகர்.
அடுத்த நாள்
காலையிலயே கடைய சல்லடை போட்டு தேட ஆரம்பித்தனர்.எல்லா இடங்களிலும் தேடுதல் வேட்டை நடந்தது.
காலையிலேயே தலை கனமாக இருப்பது போல உணர்ந்தாள் லாவண்யா.காய்ச்சல் வேறு சரி லீவ் போட்டுறலாம் என வீட்டில் நல்லா ரெஸ்ட் எடுத்து கொண்டு இருந்தாள்.
அது தெரியாமல் அங்கு அந்த தடி மாடுகள் சல்லடை போட்டு தேடி கொண்டு இருந்தனர்.
மதியம் ஆனது .யாருக்கும் ஒரு தகவலும் தெரியவில்லை.
அண்ணா அவ தப்பிச்சிட்டா போல என்றான் அந்த வலது கை.
ஆமா வெக்கமே இல்லாம சொல்லு என திட்டியவன் வேகமாக வெளியேறினான்.
வெளியே போனவன் திரும்பி பார்த்து,அய்யோ பாவம் மா லாவண்யா நீ நல்லது பண்ணியே மாட்டிக்கிற என கேவல சிரிப்பு ஒன்றை சிரித்தான்.