மஞ்சு பாட்டி அதிகாலையிலே எழுந்து குளித்து பூஜை செய்த பிறகே சாப்பிடும் பழக்கம் உடையவர்.
லாவண்யா பாட்டியை தேடி கொண்டு போகும் போது அவர் பூஜை அறையில் இருந்து வெளியே வந்தார்.
சாதாரண பச்சை வண்ண காட்டன் புடவையிலும் அந்த ஒற்றைக் கல் மூக்குத்தியும் லாவண்யாவை எப்போதும் ஈர்ப்பவை.இன்றும் அதே போல பாட்டி ஜொலிக்க பாட்டியை கட்டி அணைத்தப்படி உம்மா உம்மா என இரு கன்னங்களையும் எச்சில் செய்தாள்.
அடியேய் விடு டி என்னாச்சு உனக்கு என்றார் பாட்டி.
நீ இன்னக்கி ரொம்ப அழகா இருக்க பாட்டி இல்ல ல பியூட்டி என்றாள் லாவண்யா.
காலையிலயே தலைக்கு எண்ணெய் வச்சு சிகக்காய் தேய்த்து மஞ்சள் போட்டு குளிக்கனும் அத விட்டுட்டு கழுதை மாதிரி ஏழு மணிக்கு எந்திரிச்சி கிளம்பனா இரண்டே நாள் ல நா உன்ன மாதிரி ஆயிருவேன் என்றார் பாட்டி.
இப்போ அழகு இரகசியத்த யாரும் கேட்கல அழகி என பாட்டியின் தோள் மேல் கை போட்டு கொண்டவள் உனக்கு கூட என்னை மாதிரி மாறனும் னு ஆசை வந்துருச்சு ல நோ பிராப்ளம் நீயும் ஏழு மணிக்கே எந்திரி.எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லப்பா என்றாள் கண்களில் குறும்புடன்.
இப்ப உனக்கு ஏதோ தேவைப்படுது அதனால தான் நீ இங்க வந்து என்கிட்ட மொக்க போடுற .சீக்கிரம் சொல்லு எனக்கு 1008 வேலை இருக்கு என்றார் பாட்டி.
எல்லாம் என் நேரம் என மனதிற்குள் நு
நினைத்து கொண்டவள்.நம்ம வருடாவருடம் அன்னை இல்லத்துல கொண்டாடுவோம் ல 'வெள்ளை தினம்' அது மூணு நாள் ல வருது.நாம சென்னை போவோமா பாட்டி என்றாள்
லாவண்யா.லூசு மாதிரி பேசாம வேலைய பாரு என்றபடி பாட்டி கிட்சனுக்குள் போய் விட்டார்.
பாட்டி என் டார்லிங் என்றபடி பின்னாடியே போனாள் லாவண்யா.
நீண்ட நேர போராட்டத்திற்கு பின் பாட்டி ஒரு வழியாக ஒத்துக் கொண்டார்.ஆனால் சிவா ஓகே சொன்னால் தான் போலாம் என்றார்.
லாவண்யாவும் சரி சரி என தலை ஆட்டினாள்.நம்ம சிவா தான பாத்துக்கலாம் னு ஒரு தைரியம் தான்.