லாவண்யா காலேஜ் பஸ்ஸிலே சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டது.வீட்டில் இருந்து ஒரு பத்தடி தூரத்தில் பஸ் ஏற போக வேண்டும்.
ரொம்ப போர் அடிச்சு போய் இருந்தேன் பாட்டி .நாளை ல இருந்து ஜாலி தான் .டைம் போறதே தெரியாது என்றாள் லாவண்யா.
பயமா இல்லயா என்றார் பாட்டி.
எனக்கு என்ன பாட்டி பயம்.புது கேரக்டர் லாம் மீட் பண்ணலாம் ஜாலியா இருக்கும் என்றாள் லாவண்யா.
அதுவும் சரி தான்.அங்க இருக்குற பாவப்பட்ட பசங்க தான் உன்ன பாத்து பயப்பட போறாங்க.சரி உன் முடிய கொஞ்சமா வெடிக்கோ அப்ப தான் காலேஜ் கிளம்ப டைம் பத்தும் என்றார் பாட்டி.
என்ன சொன்ன என இடுப்பில் இருகையையும் வைத்து கொண்டு முறைத்தாள்.
முடி லாம் வெட்ட முடியாது பாட்டி.இதுக்கு கூட டைம் பத்தல னு சொல்ரது லாம் சுத்த மடத்தனம் .நீ ஒரு விஷயத்த மறந்துட்ட நா இப்ப ஒன்னும் புதுசா காலேஜ் போற பாப்பா இல்ல ஏற்கனவே மூணு வருஷம் காலேஜ் ல தான படிச்சேன். ஐ கேன் மனேஜ் என்று பொறிந்து தள்ளினாள்.
எல்லாம் சரி தான்.உனக்கு 7 மணிக்கு பஸ் அப்ப தான் காலேஜ் போ முடியும் பாத்துக்கோ என்றார் .
லாவண்யா கண்டுக்கவில்லை.
நானே பாப் கட் பண்ணிக்கலாமா னு பாத்துட்டு இருக்கேன்.இவ என்ன கிழவி மாதிரி டைலாக் பேசுறா.ஒரு வேள என்னோடா பாட்டி யா இருப்பாளோ என்று தன் வாய்க்குள் பேசினார் மஞ்சு பாட்டி.
பாட்டி .... நீ பாப் கட் பண்ண போறியா....வேணாம் அப்புறம் நீ ரொம்ப அழகா இருக்க னு தாத்தா அவருகூட கூட்டிட்டு போய்ர போறாரு என்று கீர்த்தி சுரேஸ் ஸ்டைலில் விழுந்து விழுந்து சிரித்தாள்.