உயிர்-37

3K 137 79
                                    

டிரைவர் காரை நிறுத்த வேகமாக இறங்கி வெளியே போய் நின்று கொண்டான் சிவா.

அட பக்கி .ஓ கோவமா இருக்கியா.சரி இருந்துகோ என மனதில் நினைத்தபடி இருந்த இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தாள் லாவண்யா

என்னடா நாம வெளிய வந்து நிக்கிறோம் அவள காணோமே என காருக்குள் பார்த்தாள் லாவண்யா வேடிக்கை பார்த்த படி இருந்தாள்.

அட கொடுமையே நீ நல்லா வருவடி என மனதிற்குள் கறுவிக்கொண்டு நா கீழ இறங்கி நிக்கிறேன் நீ என்ன பண்ற காருக்குள்ள என்றான்.

ஏன் சிவா கீழ நிக்கிற.வா வந்து உர்காந்துகோ நா ஒன்னும்  தப்பா நினைக்க மாட்டேன் என்றாள் அப்பாவியாக.

இவ கிட்ட நாம என்னைக்கு பேசி ஜெயிச்சோம் என நினைத்தபடி அவனும் காரில் ஏறி அமர்ந்தான்.

எனக்கு உன்மேல கோவம் இல்ல சிவா வருத்தம் தான்.என் வாழ்க்கைல என்ன எப்படி நடக்கும் னே தெரியல டா.நீயும் என்கிட்ட எதையோ மறைக்கிற மாதிரி பீல் ஆகுது னா.ரொம்ப பதட்டமா இருக்கு என்றாள் லாவண்யா.

அவள் கையை தன் கையோடு கோர்த்து கொண்டான் சிவா.

நா உனக்கு கஷ்டம் தர்ற மாதிரி எதுவும் செய்ய மாட்டேன் டி.பதட்டம் லா வேணாம் ரிலாக்ஸா இரு.நாம இப்ப பெங்களூர் போறோம்.நா டெய்லி காலை 7 மணிக்கு போய்ட்டு நைட் 9 மணிக்கு தான் வீட்டுக்கு வருவேன்.நீ என்ன பண்ண போறனு அப்புறம் முடிவு பண்ணலாம்.சொன்னா தப்பா எடுத்துக்காத உன்கிட்ட ஏதோ ஒரு இரகசியம் இருக்கு.மே பி அது அந்த இராஜசேகர் சம்மதமா இருக்கலாம்.அத நீ மறைக்கிற னு தெரியும் பரவால்ல அந்த எம்எல்ஏ அது இது பிரச்சினை வேணாம் னு தான் நாம பெங்களூர் போறோம் என்றான் சிவா.

ரொம்ப தேங்கஸ் சிவா.இந்த உதவி ய நா ஒருநாளும் மறக்க மாட்டேன் என கை எடுத்து கும்பிட்டாள்.

அண்ணா அந்த ஹோட்டல் கிட்ட நிறுத்துங்க என்றான் சிவா டிரைவரிடம்.

டேய் பக்கி .சரி தேங்க்ஸ் லாம் சொல்ல மாட்டேன் டா ஒழுங்கா வண்டிய எடுக்க சொல்லு என்றாள் லாவண்யா.

இறங்கு டி முதல்ல.நீ தேங்க்‌ஸ் சொன்னதுக்கு லாம் இல்ல பசி வயித்த கிள்ளுது வா சாப்படலாம் என்றான்.

அய்யோ பல்பு வாங்கிட்டோமா.சரி சரி நம்ம சிவா தானே என்றபடி இருவரும் சாப்பிட சென்றனர்.

சாப்பிட்ட பின்னர் சிவா லாவண்யாவிடம் ஒரு மில்கி பாரை நீட்டினான்.அவளும் சந்தோஷமாக வாங்கி கொண்டாள்.

சுத்தமான பால் போல ஒரு நல்ல சாக்கலேட் னா அது மில்கி பார் தான்.ரொம்ப ரொம்ப tasty.

ரொம்ப நாள் கழித்து சாப்பிடுவதால் ரசித்து ரசித்து சாப்பிட்டாள்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

ரொம்ப நாள் கழித்து சாப்பிடுவதால் ரசித்து ரசித்து சாப்பிட்டாள்.அவன் அவள் சாப்பிடும் அழகில் தன்னை மறந்தான்.

ஒருவழியா அவள் சாப்பிட்டு முடிக்க இருவரும் பயணத்தை தொடங்கினர்.

காலையில் இருந்து காய்ச்சல் என தூங்கிதால் லாவண்யாக்கு தூக்கமே வரவில்லை.சிவாவோ தூங்கி வழிந்தான்.

தூக்க கலக்கத்தில் லாவண்யாவின் தோளில் சாய்ந்தான்.லாவண்யா திடுக்கிட்டாள்.

அவனை நேராக சீட்டில் படுக்க வைத்தாள்.மறுபடி அவன் தூக்கத்தில் விழ பாவமாக இருந்தாலும் சீட்டில் சாய்த்து விட்டாள்.

அவன் மடி ல நல்லா படுத்து தூங்க தெரியுது இப்ப பாரு சரியான செல்பிஷ் என அவள் மனம் திட்டியது.

ஆமா  மா நீ பெரிய கோல்டன் பிஷ் பாரு.பட்டது போது கண்ணம்மா என அவள் மனதை திட்டினாள்.

எப்படியோ சிறிது நேரத்தில் தூங்கியும் போனாள்.திடிரென முழிப்பு தட்டியது.

கண்ணை திறந்து பார்த்தாள்.மேடம் நல்லா ஜாலியா சிவா தோள் ல சாய்ந்து தூங்கி இருக்கிறாள் .அவன் அவள் தலை ய பேலன்ஸ் க்கு அணைத்தவாறு தூக்கியுள்ளான்.

வெளியே ஒரு புது உலகம் உதயம் ஆகி இருந்தது.

உயிரின் உயிராய்Where stories live. Discover now