தேவையான அனைத்து கோப்புகளையும்(file) அடுக்கி கொண்டு இருந்தாள் லாவண்யா.
அப்போது வருண் அங்கு வந்தான்.எல்லா ரெடி பண்ணிட்டியா என கேட்டான் .
ரெடி பண்ணிட்டேன். நீ கொஞ்சம் செக் பண்ணு என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.
அவனும் நல்லா செக் பண்ணி பார்த்தான்.எல்லா file உம் பக்காவாக இருந்தது. லாவண்யா வந்தவுடன் ஓய், ஒரு file கிழிஞ்சு இருக்கு என்றான் வருண்.
என்னது லூசு வருண் .கிழிச்சிட்டியா என்று கத்தினாள்.
என்னது லூசா.நல்ல மரியாத சும்மா சொன்னேன் என்றான்.
தெரியும் நா என்னையவிட உன்னதான் ரொம்ப நம்புறேன் என்றாள் லாவண்யா.
அப்படிங்களா மேடம்.டைமாச்சு வா போலாம் என்றான் வருண்.இருவரும் சென்றனர்.
இவர்கள் இருவரையும் பார்த்த லாயர் லாவண்யா இப்படி வா மா என அழைத்து சென்றார்.
சொல்லுங்க சார் என்றாள் லாவண்யா.
அந்த பையன் என்று அவர் சொல்லும் முன்னே எனக்கு எல்லாம் தெரியும் சார் என்றாள் லாவண்யா.
லாயர் சற்று குழப்பத்துடன் அவளை பார்த்தார் ஆனால் ஒன்றும் கூறாமல் போலாம் என்றார்.
கோர்ட்டில் கேஸ் விறுவிறுப்பாக நடந்தது. நீதிபதி மிகவும் குழம்பி போனார்.பின் லாவண்யாவிடம் சில கேள்விகள் கேட்டார்.லாவண்யாவிடம் பேசியவுடன் நீதிபதி கமலா உண்மையை உணர்ந்து கொண்டார்.
சிறிது இடைவேளைக்கு பிறகு கேஸ் தொடங்கும் என அறிவித்தார்.4 மணிக்கு மீண்டும் கேஸ் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.