அழகிய இளங்காலை.அதிகாலை 5மணி.சுறுசுறுப்பாக எழுந்து படித்து கொண்டு இருந்தாள் நம் நாயகி லாவண்யா.8 th படிக்கும் மாணவி.படிக்கும் போது ஏதோ சத்தம் கேட்டது.அது பக்கத்து வீட்டில் இருந்த என அறிந்தாள்.எப்போதும் போல தன் மகனை படிக்க சொல்லி கத்தி கொண்டு இருந்தாள் அவனின் தாய். அவன் 10ம் வகுப்பு படிக்கும் சிவா.நன்கு படித்து வந்தவன் திடீரென படிப்பில் சேர்ந்து போனான்.அவன் தாய் தினமும் அடி உதை என பின்னி எடுத்தார்.அவன் அலரும் சத்தம் அனைவரும் கேட்டதே.லாவண்யா சில சமயம் வருந்துவாள் பல முறை கோபம் கொள்வாள்.நம் நாயகியின் தந்தை தாய் இருவரும் வேலைக்கு செல்பவர்கள். அதனால் இவள் சிறு வயதிலே பக்கவமாக பொறப்பாகவும் இருப்பாள்.வீட்டில் பாசத்துக்கு குறைவில்லை.படிப்பிலும் ஆர்வம் உடையவள்.அழகை பற்றி வர்ணிக்கும் வயதில்லை ஆனால் அழகுக்கு குறையில்லை.லாவண்யாவின் தாய் தந்தையும் பக்கத்தது வீட்டாரடிம் நன்கு பழகினர்.சரி கதைக்கு வருவோம். லாவண்யா படித்து முடித்து தேவயானவற்றை எடுத்து வைத்து கொண்டு இருந்தாள். அப்போது சிவா அடி வாங்கும் சத்தம் கேட்டு இன்று ஏதோ சிரிப்பு வந்தது. தன் நீண்ட கூந்தலை காயவைத்து கொண்டு வந்த வள்,வெளியே படித்து கொண்டு இருந்தவனை எட்டிப்பார்த்து சென்றாள்.பின் வேனில் இவனை எப்படி கலாய்க்கலாம் என எண்ணி சிரித்து மகிழ்ந்தாள்.தன் தம்பியையும் எழுப்பி கிளம்ப செய்து கொண்டு இருந்தாள்.அம்மா சமையலை முடிக்க அதனையும் எடுத்து வைத்தாள்.அனைத்தும் தயாரன பின் வெளியே வந்து பார்த்தவள் வேன் வந்த்தை கண்டு வேகமாக உள்ளே செல்ல அவன் மீது இடித்து விட்டாள்.அவன் தன்தாயின் மீது இருந்த கோபத்தையும் சேர்ந்து திட்டி தீர்த்தான்.அவள் வேனில் கவனித்து கொள்கிறேன் என்று மனதுக்குள் நினைத்து கொண்டு சென்று விட்டாள்.இவன் மானத்தை வாங்க முடிவு செய்து கொண்டாள்.ஆனால் அதன் விளைவை அவள் அறியவில்லை.