லாவண்யாவின் காய்ச்சல் கொஞ்சம் குறைந்து இருந்தது. அவளே எழுந்து போய் கஞ்சி செய்தாள்.
அவள் வீட்டில் இருக்கும் போது அவளுக்கு உடம்பு சரியில்ல னா நியூஸ் ல சொல்லாத குறை தான் ஆனா இப்போ பாவம் லாவண்யா.
கஞ்சி குடித்து முடித்தவுடன் உடம்பெல்லாம் வலிக்க தூங்க முயற்சித்தாள்.கண்ணை மூடினாள் யாரோ துரத்துவது போல பயமாக இருக்கவே எழுந்து உட்கார்ந்தாள்.
உள்ளுணர்வு ஏதோ பயங்கர ஓலமிட்டது.ரவிக்கு கால் செய்து பேசினாள்.சும்மா சாதாரணமாக பேசுவது போல ஒரு 15 நிமிடம் பேசினாள் பின் அவன் வேலை இருக்கு டா அப்புறம் பேசுறேன் என போனை வைத்து விட்டான்.
அவன் போனை வைத்த பிறகு தான் கவனித்தாள்.அவளோடு வேலை பார்க்கும் மல்லிகாவிடம் இருந்து 3 மிஸ்ட் கால்.இவளே கால் செய்தாள்.
சொல்லு மல்லி கால் பண்ணி இருந்த என்றாள் லாவண்யா.
ஏய் வண்டு லா வண்டு உனக்கு எவ்ளோ சொந்தகாரங்க இருக்காங்க .என்கிட்ட லாம் ஒரு வார்த்தை சொன்னியா என்றாள் மல்லிகா.
என்னடி சொல்ர .புரியல தெளிவா சொல்லு என்றபடி வெளியே பார்த்தாள் மேகமூட்டத்தோடு இருந்தது.
உன்ன தேடி உங்க மாமா வந்தாரு டி.அரசியல்வாதி யாமே.என்கிட்ட லாம் சொன்னியா என்று மல்லிகா சிரிக்க.
லாவண்யாவிற்கு வந்தது அந்த ராஜசேகர் என்பது புரிந்தது. பயத்தை காட்டிக்காமல் நா அங்க வரேனு சொல்லு என்றாள் நம் லாவண்டு.
உனக்கு உடம்பு சரியில்ல ல அதான் நா address குடுத்துட்டேன்.அவங்க ஒரு 15 நிமிஷத்துல அங்க இருப்பாங்க.என்னலாம் மறந்துராத டி என மல்லிகா ஏதோ பேசி கொண்டே போக லாவண்யாவின் மூளை வேகமாக செயல்பட்டது.
தேவையானவற்றை அள்ளி கொண்டாள்.எங்க போலாம் என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை.
முதல்ல இந்த இடத்துல இருக்க கூடாது என முடிவு எடுத்தவள்.வேகமாக வெளியே வந்தாள்.மழை தூறல் போட்டது.